Friday, February 12, 2016

முட்டைகோஸ் பட்டாணி பொரியல் / Cabbage Peas Poriyal


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை கோஸ் - 100 கிராம் 
  2. பிரஷ் பட்டாணி - 100 கிராம் 
  3. தக்காளி - 1
  4. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
  5. சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. மல்லித்தழை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முட்டைகோஸ், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பட்டாணியை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதிக்க  ஆரம்பித்தவுடன் அடுப்பை  சிம்மில் வைத்து 15 நிமிடம் வைக்கவும்.பட்டாணி வெந்ததும்  தண்ணீரை வடித்து  தனியே வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் முட்டைகோஸ் சேர்த்து கிளறி அதனுடன் 100 மில்லி தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.
  5. முட்டைகோஸ் நன்கு வெந்ததும் அதனுடன் உப்பு, அவித்து வைத்துள்ள பட்டாணி சேர்த்து கிளறவும்.
  6. பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பிறகு தேங்காய் துருவல், மல்லித்தழை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டைகோஸ் பட்டாணி பொரியல் ரெடி.

20 comments:

  1. ஆஹா அருமையான அயிட்டம் படங்கள் அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கு நன்றி சகோ.

      Delete
  2. இவ்வளவு துணைப் பொருட்கள் முட்டை கோஸில் போட்டதில்லை. செய்துடுவோம்.

    ReplyDelete
  3. முட்டைக்கோஸில் நல்லதொரு குறிப்பு அக்கா.படங்கள் அருமையா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்கு பிறகு பிரியசகியின் வருகை கண்டு மகிழ்ச்சி.

      Delete
  4. முட்டைக்கோஸ் அருமையா இருக்கும் போல,, செய்து பார்க்கிறேன் மா,, படங்கள் தாங்கள் செய்ததை எடுத்ததா?

    ReplyDelete
    Replies
    1. படங்கள் நான் செய்ததை எடுத்தது தான்.I phone il எடுத்தது. வருகைக்கு நன்றி மகேஸ்வரி.

      Delete
  5. நல்லதொரு குறிப்பு..இங்கே அடிக்கடி செய்வதுண்டு..
    ஆனால் தக்காளி சேர்ப்பதில்லை..

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  6. படங்களுடன் விளக்கமாய் சமையல் குறிப்பு...
    அருமை அம்மா..

    ReplyDelete
  7. எனக்கு ரொம்ப பிடித்தது முட்டைகோஸ். இரண்டுமே வீட்டில் இருக்கு அம்மா. 2 நாள் சைவத்திற்கு லீவ்.. வீக் டேஸ் பண்ணிட்டு போட்டோ அனுப்புறேன்..

    ReplyDelete

  8. செய்து போட்டோ எடுத்து அனுப்பு அபி.

    ReplyDelete
  9. நேற்று லஞ்சிற்கு செய்தேன் மா.

    சுவையாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. செய்து பார்த்து கருத்து சொன்ன ஷமீக்கு நன்றி.

      Delete
  10. அருமையான செய்முறை விளக்கம் அம்மா....
    நானும் செய்து பார்க்கிறேன்...

    ReplyDelete
  11. செய்து பாருங்கள் அஜய்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...