பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பொன்னாங்கண்ணி கீரை - 2 கைப்பிடி அளவு
- பாசிப்பருப்பு - 50 கிராம்
- காயம் - 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- தக்காளி - 1
- சின்ன வெங்காயம் - 6
- மிளகாய் வத்தல் - 2
- சீரகம் - 1 தேக்கரண்டி
- பூண்டு பற்கள் - 3
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- கீரையை நன்கு கழுவி காம்புகளை ஆய்ந்து பொடிதாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும்.
- கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து முக்கால் பதம் வரை வேக வைக்கவும். பிறகு அதனுடன் கீரை, உப்பு சேர்க்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
- கீரை வெந்த்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். கூட்டு கெட்டியானதும் இறக்கி விடவும்.
- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து கீரை கூட்டில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான பொன்னாங்கண்ணி கீரை கூட்டு ரெடி.
ஒரு நாள் இது போல செய்து பார்க்கிறேன் அம்மா.. சூப்பர்..
ReplyDelete
Deleteமுதல் வருகைக்கு நன்றி அபி. கண்டிப்பாக செய்து பாரு நன்றாக இருக்கும்.
நான் வெறும் பருப்பு மட்டும் சேர்த்து செய்தது, தாங்கள் சொன்னது போல் அறைத்துகொட்டி செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteதங்கள் விளக்கம் சூப்பர்,,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஸ்வரி.
Deleteருசித்தேன். நன்றி.
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்.
Deleteசத்தான பொன்னாங்கன்னி கூட்டு சூப்பர்.
ReplyDeleteநான் வேற கீரையில் இப்படி செய்தேன். காய் கூட்டும் இது போல் செய்து இருக்கிறேன்.
அருமை சகோ
சகோவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஅருமை
ReplyDeleteநன்றி சார்.
Deleteமிக அருமையான குறிப்பு. தக்காளியையும் அரைத்துப்போட்டு சமைப்பது வித்தியாசமாக இருக்கிறது. விரைவில் செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteசெய்து பாருங்கள் மனோக்கா. சுவை நன்றாக இருக்கும்.
Deleteஇன்றுதான் முதன் முதலாய் தங்கள்
ReplyDeleteபதிவுக்குள் வருகிறேன் என நினைக்கிறேன்
படங்களும் செய்முறை விளக்கமும்
மிக மிக அருமையாக உள்ளது.
இனித் தொடர்ந்து வருவேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். தொடர்ந்து வருகை தாருங்கள்.
Deleteகீரை கூட்டு நன்றாக இருக்கு.
ReplyDeleteதக்காளி வெங்காயம் அரைத்து செய்ததில்லை. முயற்சித்து பார்த்து சொல்றேன் மா.
இந்த முறையில் செய்து பாருங்கள் ஷமீ.
ReplyDeleteசெய் முறை விளக்கம் அருமை
ReplyDeleteஇந்த பதிவை ரசிக்கிறேன்...
இதை ஒருநாள் செய்து ருசிக்கிறேன்....
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteநன்றி எதற்கு அம்மா....
Deleteமுதலிடத்தில் முளைக்கீரையையும், அடுத்த சாய்ஸாக அரைக்கீரையையும், எப்போதாவது பசலிக்கீரையையும், அவ்வப்போது மணத்தக்காளியும், மிக அரிதாக வெந்தயக் கீரையும் சமைப்போம். பொன்னாங்கண்ணி கீரை எப்போதோ சிறுவயதில் ஒருமுறை சாப்பிட்டதுண்டு.
ReplyDeleteமுளை, அரைக்கீரைகளில் இளசாய் இருக்கும் தண்டையும் நறுக்கிப் போடுவோம். இதில் வெறும் இலை மட்டும்தானா?
அடுத்தமுறை பொன்னாங்கண்ணி கீரை வாங்கி இதுபோலச் செய்து பார்க்கிறோம்.
வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி சகோ.
ReplyDeleteசூப்பர் வித்தியாசமான ஒரு உணவு...
ReplyDeleteThank you
ReplyDelete