Saturday, January 30, 2016

பட்டாணி புலாவ் / Peas Pulao


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாஸ்மதி அரிசி - 150 கிராம் 
  2. பட்டாணி - 100 கிராம் 
  3. பெரிய வெங்காயம் - 1
  4. பச்சை மிளகாய் - 3
  5. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  3. பட்டை - சிறிய துண்டு 
  4. கிராம்பு - 2
  5. ஏலக்காய் - 2
  6. பிரிஞ்சி இலை - 1
தேங்காய் பால் எடுக்க-
  1. தேங்காய் துருவல் - 1  கப் 
செய்முறை -
  1. பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
  2. தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைத்து 400 மில்லி அளவுக்கு பால் எடுத்து வைக்கவும்.
  3. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போடவும்.
  4. பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  5. பச்சை வாடை போனதும் பட்டாணி சேர்த்து கிளறவும். பிறகு அதனுடன் தேங்காய் பால், உப்பு சேர்க்கவும்.
  6. தேங்காய் பால் கொதிக்க ஆரம்பித்ததும் அதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடவும்.
  7. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  8. ஆவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி விடவும். சுவையான பட்டாணி புலாவ் ரெடி.

16 comments:

  1. அருமை புகைப்படத்தை பார்த்தாலே பசிக்கின்றதே...

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கு நன்றி சகோ.

      Delete
  2. வாவ்.. யம்மி.. பச்சை பட்டாணி வாங்கும் போது செய்து பார்க்கிறேன்மா..

    ReplyDelete
  3. கண்டிப்பாக செய்து பாரு அபி.

    ReplyDelete
  4. அடிக்கடி செய்வோம் சகோ...மணம் இழுக்கிறதே.....

    ReplyDelete
  5. செய்து ருசிக்கிறோம் அம்மா...

    ReplyDelete
  6. பட்டாணி புலாவ் சுலபமான செய்முறையா இருக்கு. நான் கொஞ்சம் மசாலா வகைகள் சேர்ப்பேன்.

    உங்கள் முறையில் ஒரு முறை செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக இந்த முறையிலும் செய்து பாருங்கள் ஷமீ.

      Delete
  7. பட்டாணிப் புலவு அருமை..

    இதை விரைவில் செய்திட முடியும்.. கூடவே குருமாவும் இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம்!..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  8. வணக்கம்
    அம்மா

    செய்து பார்க்கிறோம் நன்றாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. செய்து பாருங்கள் ரூபன்.

    ReplyDelete
  10. எளிய விளக்கம்,, செய்து பார்த்திட வேண்டியது தான்,

    ReplyDelete
  11. செய்து பாருங்கள் மகேஸ்வரி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...