பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு
- மிளகாய் வத்தல் - 3
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- புளி - பாக்கு அளவு
- பூண்டு பற்கள் - 4
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுக்கவும். பிறகு அதோடு தேங்காய் துருவல், புளி, பூண்டு சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
- அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கறிவேப்பிலையை வறுக்கவும்.
- வறுத்த கறிவேப்பிலையை தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.
- ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.
- இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
பார்க்கவே ஆசையா இருக்கு..நாளை செய்து பார்க்கிறேன் அம்மா..
ReplyDeleteசெய்து பார்த்து நாளைக்கு எப்படி இருந்தது என்று சொல்லு அபி.
Deleteவணக்கம்
ReplyDeleteசெய்முறை விளக்கத்துடன் அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் செய்து சாப்பிடுகிறோம்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி ரூபன்.
Deleteதங்களின் செய்முறைப்படி செய்து பார்க்கிறோம்... நன்றி...
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்.
Deleteஎனக்கு பிடித்தமானது சகோ
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ.
Deleteஉடலுக்கு நல்லது.. கறிவேப்பிலை சட்னி இருந்தால் - கூட நாலு இட்லி சாப்பிடலாம்..
ReplyDeleteஅருமை..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
Deleteஆரோக்கியமான சட்னி....
ReplyDeleteநன்றி சகோ.
Deleteசத்தான சட்னி! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
Deleteஆஹா... பார்க்கவே ரொம்ப நல்லாயிருக்கு.
ReplyDeleteநன்றி குமார்.
Deleteஆரோக்கியமான சட்னி
ReplyDeleteநன்றி ஜலீலா.
Deleteகறிவேப்பிலை சட்னி செய்து நேற்று தோசையோடு சாப்பிட்டாச்சு. நல்லா இருந்தது உங்க செய்முறை.
ReplyDeleteசெய்து பார்த்து சொன்ன கருத்துக்கு நன்றி ஷமீ.
ReplyDeleteநன்றி - இன்று காலை செய்து சுவைத்தோம் - அற்புதமாய் இருந்தது.
ReplyDeleteசெய்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
ReplyDeleteIt's good for weight loss and hair growth...thank you madam
ReplyDelete