Monday, January 11, 2016

பனீர் குடமிளகாய் கிரேவி / Paneer Capsicum Gravy


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பனீர் - 200 கிராம் 
  2. குடமிளகாய் - 1
  3. தக்காளி - 1 
  4. சிவப்பு மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  6. கரம் மசாலா - 1 தேக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு 
  10. மல்லித்தழை - சிறிது
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. சோம்பு - 1 தேக்கரண்டி 
  3. பெரிய வெங்காயம் - 1
  4. கறிவேப்பிலை - சிறிது     
அரைக்க - 
  1. தேங்காய் துருவல் - 50 கிராம் 
செய்முறை 
  1. பனீர், குடமிளகாய், வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.   
  3. அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து  பனீர் துண்டுகளை போட்டு லைட் பிரவுன்  கலர் வரும் வரை வதக்கி தனியே வைக்கவும். 
     
  4. அடுப்பில் அதே கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போடவும். சோம்பு பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 
  7. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு பனீர் துண்டுகளை சேர்த்து 3 அல்லது 5 நிமிடம் வரை கொதிக்க விட்டு மல்லித்தழை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

26 comments:

  1. ரொம்ப ஈசியா இருக்குமா.. பார்க்கவே நல்லா இருக்கு..

    ReplyDelete
  2. பனீர் கிரேவி அருமை.

    ReplyDelete
  3. கிரேவியின் படமே அழகாக இருக்கின்றது சகோ

    ReplyDelete
  4. நல்லதொரு குறிப்பு..
    பனீர் சமையல் அடிக்கடி செய்வேன்.. மிகவும் விருப்பமானது..

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  5. ஆகா!சூப்பரா இருக்கும் போலிருக்கே!

    ReplyDelete
  6. வணக்கம்
    அம்மா

    சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ரூபன்.

      Delete
  7. ஒருமுறை செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்து பாருங்கள் ஸ்ரீராம்.

      Delete
  8. கீதம் அக்காவின் பயணங்கள் முடிவதில்லை தொடரில் அழைப்பினை கண்டேன்.பனீர் குடைமிளகாய் குறிப்பு படங்களுடன் அசத்தலாய் இருக்கின்றது.அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிஷா.

      Delete
  9. அருமை அருமை பனீர் சமையல் மிகவும் பிடித்தமான ஒன்று. அடிக்கடி செய்து சாப்பிடுவோம். சூப்பர்...

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  11. எளிய செய்முறையாக உள்ளது. உடனே செய்துபார்க்கிறேன். நன்றி மேடம்.

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி,


    பதிவு அருமை. கிரைவியின் படங்கள், செய்முறை ரசித்தேன்.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாண்டின் பொங்கும் மங்கலம் அனைவருக்கும் எங்கும் எதிலும், எப்போதும் தங்குக..! என இறைவனிடம் மனமாற பணிவுடன் வேண்டுகிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. அன்பினும் இனிய சகோதரி/

    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
    இணையில்லாத இன்பத் திருநாளாம்
    "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  14. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சாரதா அம்மா.

    ReplyDelete
  15. வணக்கம்
    அம்மா
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. வாவ்... சூப்பர்...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...