பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- உருளைக்கிழங்கு - 3
- தக்காளி - 1
- பெரிய வெங்காயம் - 1/2
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மல்லித்தழை - சிறிது
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1/2
- கறிவேப்பிலை - சிறிது
- அடுப்பில் குக்கரில் உருளைக்கிழங்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- நீராவி அடங்கியதும் மூடியை திறந்து உருளைக்கிழங்குகளை சிறிது நேரம் ஆறவிட்டு தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடிதாகவும் நறுக்கி வைக்கவும்.
- தேங்காய் துருவல், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவு, தக்காளி எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
- பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, மற்றும் உப்பு சேர்த்து கிளறி அதனுடன் 100 மில்லி தண்ணீர் சேர்க்கவும்.
- மசாலா கெட்டியானதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான பூரி மசாலா ரெடி.
பார்த்தாலே டேஸ்டா இருக்கும் போல தெரியுது.. சீக்கிரம் பண்ணி அனுப்புறேன்..
ReplyDeleteசீக்கிரம் பண்ணி எனக்கு போட்டோ அனுப்பு அபி.
Deleteபூரி மசாலா... மிகவும் விருப்பமானது..
ReplyDeleteநல்லதொரு செய்முறை..
வாழ்க நலம்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
Deleteபூரி மசால் அருமை.
ReplyDeleteஉங்க குறிப்பை பார்த்து எனக்கு ஒரே ஆச்சரியம் நானும் இதே பூரி மசால் இன்று பதிவு போட வெச்சிருக்கேன்.ஆனால் உங்க செய்முறை நன்றாக இருக்கு.
உங்கள் பதிவையும் இன்று போடுங்க ஷமீ. நான் உங்கள் தளத்திற்கு பார்க்க வருகிறேன்.
Deleteமசால் அருமைமா, செய்து பார்க்கிறேன். தங்கள் செய்முறை நன்றாக உள்ளது.
ReplyDeleteகருத்துக்கு நன்றி மகேஸ்வரி.
ReplyDeleteஸூப்பர் மசால் படமே பெருமூச்சு விட வைக்கின்றது சகோ.
ReplyDeleteகருத்துக்கு நன்றி சகோ.
Deleteசுவையான மசாலாவை ருசித்தேன்! நன்றி!
ReplyDeleteருசித்தமைக்கு நன்றி சார்.
ReplyDeleteகொஞ்சம் வித்தியாசமா இருக்கு.நான் தேங்காய் சேர்ப்பதில்லை;மிளகாய்ப் பொடிக்குப் பதில் பச்சை மிளகாய்.இதையும் ஒரு நாள் செய்து விடலாம்.
ReplyDeleteபூரி மசாலா செய்து பார்க்கணும் அம்மா...
ReplyDeleteசெய்து பாருங்கள் குமார்.
Deleteபத்து நாள் ஆனாலும் பூரி மசாலா சூப்பர் டேஸ்ட்:)
ReplyDeleteவணக்கம் சகோதரி,
ReplyDeleteநலமா? தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வளம் சேர்க்கும் நலம் நிறைந்த ஆண்டாக இவ்வாண்டு அமைய இறைவனை பிராத்திக்கிறேன்.
பூரி மசாலா செய்முறையும் படங்களும் மிக அருமையாக இருந்தது. நானும் இது போல் செய்து பார்க்கிறேன்.
நான் வலையில் வாரா நாட்களில் விட்டுப்போன தங்கள் பதிவுகளையும், மற்ற அனைவரின் படைப்புகளையும் படித்து வருகிறேன். என் தாமதக் கருத்துக்களுக்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தாமதமாக வந்தாலும் தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி சகோதரி.
Delete
ReplyDeleteஅன்பு சகோதரி,
வணக்கம்.
"இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
வாழ்த்துக்கு நன்றி சகோ.
ReplyDeleteதங்களனைவருக்கும் -
ReplyDeleteஅன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
எல்லா வளமும் பெற்று வாழ்க நலமுடன்!..
அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சாரதாம்மா....
ReplyDeleteஎன்ன வெகு நாட்களாக ப்ளாக் பக்கம் வருவதில்லை?
விடுமுறையில் வெளியூர் பயணமா ?
வணக்கம்
ReplyDeleteஅம்மா
உண்டு மகிழ்ந்தது போல ஒரு உணர்வு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Thank you Madam. You have given a new method of preparing the poori masala.
ReplyDelete