இது என்னுடைய 300 வது பதிவு. சோளமாவை வைத்து அல்வா எப்படி செய்வதென்று ஒரு ஸ்வீட் பதிவு !
தேவையான பொருள்கள் -
- சோளமாவு - 100 கிராம்
- சீனி - 200 கிராம்
- நெய் - 3 மேஜைக்கரண்டி
- முந்திரிப்பருப்பு - 15
- கேசரி கலர் - 1/2 தேக்கரண்டி
- தண்ணீர் - 200 மில்லி
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவுடன் 50 மில்லி தண்ணீர் ஊற்றி கட்டி வராதபடி கலக்கி வைக்கவும். பிறகு கேசரி கலர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து தனியே வைக்கவும்.
- அடுப்பில் அதே நான்ஸ்டிக் கடாயை வைத்து மீதமுள்ள 150 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் சீனியை போடவும். சீனி கரைந்ததும் வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும்.
- அதே நான்ஸ்டிக் கடாயில் சீனிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கலக்கி வைத்துள்ள சோளமாவு கலவையை சேர்த்து 10 நிமிடம் அல்லது அல்வா பதம் வரும் வரை விடாமல் கிளறவும்.
- அல்வா பதம் வந்ததும் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய், முந்திரிப்பருப்பு இரண்டையும் கலந்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
- சுவையான சோளமாவு அல்வா ரெடி.
சோள அல்வா!.. காணும்போதே தித்திப்பாக இருக்கின்றது..
ReplyDeleteதாங்கள் - இன்னும் பல நூறு இனிய பதிவுகளை வழங்க வேண்டும்..
அன்பின் நல்வாழ்த்துகள்..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.
Delete300வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..அல்வா பண்ணவுடனே பார்த்தேன்ல சூப்பரா இருக்கு...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி அபி.
Deleteஇன்று செய்தேன் அம்மா.. செம டேஸ்ட் சூப்பரா இருந்தது.நன்றிமா..
Deleteஅபி செய்தவுடன் போட்டோவும் அனுப்பி இப்போது கருத்தும் சொன்னதற்கு நன்றி .
Deleteமுன்னூறாவது பதிவு பார்க்கும்போதே சாப்பிடத்தூன்டும் சோள அல்வாவுடன் மணக்கிறது. முன்னூறாவது பதிவிற்கு இனிய நல்வாழ்த்துக்களும் ப்ராட்டுக்களும்!!!
ReplyDeleteவாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி மனோக்கா.
Delete300 பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சாரதா அம்மா.
ReplyDeleteசோளமாவு அல்வா கப்போட எடுத்துக்கறேன்.
வாழ்த்துக்கு நன்றி ஷமீ.
Delete300 வது பதிவுக்கு அல்வா கொடுத்தமைக்கு நன்றியும், வாழ்த்துகளும்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி சகோ.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
300வது பதிவுக்கு வாழ்த்துக்கள். சோளம் அல்வாவை பார்த்தவுடன் உண்டு மகிழ்ந்தது போல ஒரு உணர்வு பதிவை..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கு நன்றி ரூபன்.
ReplyDeletesupera irukku akka... parkave azhaga irukku ..
ReplyDelete300 vathu post ku en vazhththukkal
Thank you Sangeetha.
DeleteCongrats
Delete200 ஆவது பதிவு இனிப்பாக இருக்கிறது!
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்.
ReplyDeleteமென்மேலும் பதிவுகள் தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் மா
ReplyDeleteதாமதமான வருகைக்கு மன்னிக்க, முதலில் வாழ்த்துக்கள் 300 வது பதிவுக்கு. எளிமையான செய்முறை விளக்கம். இன்று செய்து பார்த்துச் சொல்கிறேன்மா. பல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
கில்லர்ஜி சொன்னது சரிதான் 300வது பதிவுக்கு அல்வா கொடுத்து இருக்காங்க....
ReplyDeleteவருகைக்கும், வலைப்பூவில் இணைந்ததற்கும் நன்றி சகோ.
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை
ReplyDelete