இஞ்சி தொக்கு / Ginger Thokku
தேவையான பொருள்கள் -
- இஞ்சி - 25 கிராம்
- மிளகாய் வத்தல் - 1
- வெல்லத்தூள் - 2 மேஜைக்கரண்டி
- புளி - சிறிது
- வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
- நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
செய்முறை -
- இஞ்சியை நன்றாக கழுவி துடைத்து தோல் சீவி பொடிதாக வெட்டி வைக்கவும். வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி பண்ணிக் கொள்ளவும்.
- புளியை 50 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்,
- அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி துண்டுகளை போட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்து ஆற விடவும்.
- அதே கடாயில் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் மிளகாய் வத்தலையும் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும்.
- மிக்ஸ்சியில் வதக்கி வைத்துள்ள இஞ்சி, பொரிந்த கடுகு, வறுத்த மிளகாய் வத்தல், வெல்லத்தூள், வெந்தயப்பொடி, உப்பு இவற்றோடு புளித்தண்ணீரையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும். சுவையான இஞ்சி தொக்கு ரெடி. இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
எனக்கு ரொம்ப பிடித்த உரைப்பு, இனிப்பு, புளிப்பு எல்லாம் கலந்தது.. தேங்க்ஸ் அம்மா.. ட்ரை பண்றேன்....
ReplyDeleteட்ரை பண்ணி பாரு அபி.
Deleteஉடல் நலத்திற்கு - இஞ்சி..
ReplyDeleteஇஞ்சி தொக்கு அருமை..
வாழ்க நலம்..
கருத்துக்கு நன்றி சார்.
Deleteஅல்வா மாதிரி இருக்கின்றதே...?
ReplyDeleteநீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் சகோ.
Deleteஇஞ்சி தொக்கு செய்முறை அருமை.
ReplyDeleteஷமீயின் கருத்துக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
உடலுக்கு நல்ல ஆரோக்கியம்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி ரூபன்.
Deleteதொக்கு தூக்கலாக இருந்தது. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
ReplyDeleteபௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html
பதிவை பார்த்து கருத்து சொல்லி விட்டேன் சார்.
Deleteஅட நன்றாக இருக்கும் போல இருக்கே. செய்து பார்த்து விட்டு சொல்கிறேன் ok வா . நன்றிம்மா!
ReplyDeleteok இனியாம்மா.
ReplyDeleteமழைக்கு நல்லா இருக்கும் போல் இருக்கே,
ReplyDelete
ReplyDeleteஆமா மகேஸ்வரி. வருகைக்கு நன்றி.
நல்ல குறிப்பு! செய்து பார்க்கத்தோன்றுகிறது! இஞ்சி 25 கிராம் என்றால் எவ்வளவு இருக்கும்? கப் அளவில் சொல்ல முடியுமா? ஒரு மிளகாய் போதுமா? புளி அரை நெல்லி அளவு சரியாக இருக்குமா?
ReplyDeleteவிதவிதமா சமையலில் அசத்திக் கொண்டு இருக்கீங்க அடுத்தவங்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கப் பதிவிடுகின்றீர்கள் அருமை தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீராளன்.
ReplyDeleteஇஞ்சித்துவையல் செய்வேன். தொக்கு செய்ததில்லை. எளிய செய்முறையாக உள்ளது. செய்துபார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி மேடம்.
ReplyDeleteபலே பலே!
ReplyDeleteஇதையே மாங்காய் இஞ்சியில் செய்து பாருங்கள்...
ReplyDelete