பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சிற்றுண்டியாகும். விதவிதமாக பணியாரம் செய்தாலும் இனிப்பு பணியாரத்திற்கு என்றும் தனி வரவேற்பு உண்டு. சிறிது வித்தியாசமாக ரவா, மைதா, வாழைப்பழம் கலந்து பணியாரம் எப்படி செய்வதென்று பார்ப்போம்!
- ரவா - 100 கிராம்
- மைதா - 100 கிராம்
- சீனி - 100 கிராம்
- தேங்காய் துருவல் - 100 கிராம்
- முந்திரிப்பருப்பு - 10
- சிறிய வாழைப்பழம் - 1
- நெய் - 50 மில்லி
- எண்ணெய் - 50 மில்லி
- ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - 1/4 தேக்கரண்டி
- தேங்காய் துருவலை 100 மில்லி அளவுக்கு பால் எடுத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்பை மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும்.
- வாழைப்பழத்தை மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ரவா, மைதா, சீனி முந்திரிப்பருப்பு தூள், மசித்து வைத்துள்ள வாழைப்பழம், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் தேங்காய் பாலும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- நெய், எண்ணெய் இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு நெய் கலவையை ஊற்றவும்.
- சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் குழி கொள்ளும் அளவுக்கு மாவு ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
- மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் செய்யவும். இந்த அளவுக்கு 21 பணியாரங்கள் வரும். சுவையான ரவா பணியாரம் ரெடி.
பணியாரம் மொறுமொறுன்னு நன்றாக இருக்கு.
ReplyDeleteகருத்துக்கு நன்றி ஷமீ.
Deleteஇதே முறையில் செய்து பார்க்கிறோம்...
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteபணியாரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நான் செய்து பார்த்திட்டு போட்டோ அனுப்புறேன் அம்மா...
ReplyDeleteபோட்டோ கண்டிப்பாக அனுப்பு அபி.
Deleteஅப்பாடா எனக்கு தெரிந்த ஒரு பலகாராம், அதே செய்முறை, நன்றிமா,
ReplyDeleteஇன்று செய்யப் போகிறேன்.
செய்து சுவையுங்கள் மகேஸ்வரி.
Deleteமிகவும் பிடித்தவை - எனவே, நான் இதிலிருந்து இரண்டு எடுத்துக் கொண்டேன்..
ReplyDeleteநன்றாக இருந்ததா சார் ?
Deleteஆஹா ஸூப்பர் ஐயிட்டம்
ReplyDeleteசகோவின் வருகை கண்டு மகிழ்ச்சி.
Deleteபார்த்தாலே நாக்கில் நீர் ஊறுதே!
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்.
Deleteமிக அருமையான குறிப்பு!
ReplyDeleteநன்றி மனோக்கா.
Deleteரவா சேர்த்து வித்தியாசமான குறிப்பு.!
ReplyDeleteநன்றி பிரியசகி.
ReplyDelete"ரவா பணியாரம்"
ReplyDeleteநாவில் நீர் சுரக்கிறது. நல்ல குறிப்பு! நன்றி சகோ!
நட்புடன்,
புதுவை வேலு
So tasty
ReplyDeleteThank you
ReplyDelete