பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- புதினா - ஒரு சிறிய கட்டு
- பெரிய வெங்காயம் - 1
- புளி - பாக்கு அளவு
- மிளகாய் வத்தல் - 3
- கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு இரண்டையும் வறுத்து தனியே வைக்கவும்.
- அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி வறுத்து வைத்துள்ள பருப்பு வகைகளோடு சேர்த்து வைக்கவும்.
- அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் தேங்காய் துருவலை போட்டு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
- பிறகு ஒரு மேஜைக்கரண்டி எண்ணையில் மிளகாய் வத்தலை வறுத்து அதோடு புதினா, புளி சேர்த்து வதக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.
- ஆறிய பிறகு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் கெட்டியாக அரைக்கவும். சுவையான புதினா சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
நாங்க வெங்காயம் சேர்க்காம பண்ணுவோம் அம்மா.. இதபோல் ட்ரை பண்றேன் அம்மா..
ReplyDeleteநன்றி அபி.
Deleteஅருமையாக இருக்கு புதினா சட்னி.
ReplyDeleteநன்றி ஷமீ.
Deleteஸூப்பர் சட்னி பிடித்தமானவை.
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ.
Deleteஅருமை அம்மா... நன்றி...
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteநலம் பல தரும் - புதினா சட்னி..
ReplyDeleteபதிவில் வழங்கியுள்ள குறிப்பு அருமை..
நன்றி சார்.
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
Deleteஅருமைமா,,,
ReplyDeleteவெங்காயம் சேர்த்தது இல்லை,, மற்றபடி இதே தான் நன்றி.
Deleteவருகைக்கு நன்றி மகேஸ்வரி.
ada kalakkitinga ...nanum seithu parkiren akka
ReplyDeleteThank you sangeetha.
Deleteவெங்காயம் தேங்காய் சேர்க்காமல் வீட்டில் செய்வார்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்.
Deleteபுதினா சட்னி செய்முறை விளக்கம் அருமை....
ReplyDeleteதேங்காய் சேர்ப்பதில்லை அம்மா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்.
ReplyDeleteசெய்முறை விளக்கம் அருமை
ReplyDeleteநன்றி சார்.
ReplyDeleteI prepared it. So tasty for the first time with onion
ReplyDeleteSuper flavour
ReplyDeleteThank you
ReplyDelete