Friday, November 13, 2015

புதினா சட்னி / Pudina Chutney


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. புதினா - ஒரு சிறிய  கட்டு 
  2. பெரிய வெங்காயம் - 1
  3. புளி - பாக்கு அளவு 
  4. மிளகாய் வத்தல் - 3
  5. கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  6. உளுந்தம் பருப்பு -  1 மேஜைக்கரண்டி 
  7. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  8. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு இரண்டையும் வறுத்து தனியே வைக்கவும்.
  2. அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி வறுத்து வைத்துள்ள பருப்பு வகைகளோடு சேர்த்து வைக்கவும்.
  3. அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் தேங்காய் துருவலை போட்டு வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  4. பிறகு ஒரு மேஜைக்கரண்டி எண்ணையில் மிளகாய் வத்தலை வறுத்து அதோடு புதினா, புளி சேர்த்து வதக்கி சிறிது  நேரம் ஆறவிடவும்.
  5. ஆறிய பிறகு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் கெட்டியாக அரைக்கவும். சுவையான புதினா சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

25 comments:

  1. நாங்க வெங்காயம் சேர்க்காம பண்ணுவோம் அம்மா.. இதபோல் ட்ரை பண்றேன் அம்மா..

    ReplyDelete
  2. அருமையாக இருக்கு புதினா சட்னி.

    ReplyDelete
  3. ஸூப்பர் சட்னி பிடித்தமானவை.

    ReplyDelete
  4. நலம் பல தரும் - புதினா சட்னி..
    பதிவில் வழங்கியுள்ள குறிப்பு அருமை..

    ReplyDelete
  5. வணக்கம்
    அம்மா

    செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அருமைமா,,,
    வெங்காயம் சேர்த்தது இல்லை,, மற்றபடி இதே தான் நன்றி.

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கு நன்றி மகேஸ்வரி.

      Delete
  7. ada kalakkitinga ...nanum seithu parkiren akka

    ReplyDelete
  8. வெங்காயம் தேங்காய் சேர்க்காமல் வீட்டில் செய்வார்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  9. புதினா சட்னி செய்முறை விளக்கம் அருமை....
    தேங்காய் சேர்ப்பதில்லை அம்மா...

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்.

    ReplyDelete
  11. செய்முறை விளக்கம் அருமை

    ReplyDelete
  12. I prepared it. So tasty for the first time with onion

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...