மீன் ஊறுகாய் / Fish pickle
தேவையான பொருட்கள் -
- மீன் - 1/2 கிலோ
- மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி
- வெந்தய பொடி - 1 மேஜைக்கரண்டி
- பூண்டு - 1
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- வினிகர் - 1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
- கடுகு - 1 மேஜைக்கரண்டி
- கறிவேப்பில்லை - சிறிது
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -
- இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
- மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.
- பிறகு அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயபொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
- 5 நிமிடம் ஆனதும் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். சுவையான மீன் ஊறுகாய் ரெடி.
மீன் ஊறுகாய் முதல் முறையாக கேள்வி படுறேன்.. நல்லா இருக்கும்மா....
ReplyDeleteஉடன் வருகைக்கு நன்றி அபி.
ReplyDeleteமீன் ஊறுகாய் இதுவரை நானும் அறிந்ததில்லை .செய்முறை அருமை ...
ReplyDeleteகருத்துக்கு நன்றி ஷமீ.
ReplyDeleteஸ்ஸ்ஸ்...
ReplyDeleteஸ்ஸ் ஸ் காரமா இனிப்பா என்று சொல்லலையே ! வருகைக்கு நன்றி.
Deleteமீன் ஊறுகாய் எனக்கு புதியது தான். நல்ல பகிர்வுமா,
ReplyDeleteநன்றி மகேஸ்வரி.
Deleteவணக்கம அம்மா! மீன் எனக்கு ரெம்ப பிடிக்கும்! மீனில் ஊறுகாய் எனக்கு புதிது! படம் அருமை!
ReplyDeleteநன்றி பூபகீதன்.
Delete
ReplyDeleteசிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
நன்றி சார்.
Deleteஆஹா நாவில் எச்சில் ஊறுகிறதே... அருமை
ReplyDeleteசகோ எனது பதிவு கடவுளைக் கண்டேன் படியுங்கள்
கருத்துக்கு நன்றி சகோ. இதோ உங்கள் பதிவை படிக்க வருகிறேன்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசெய்முறை விளக்கத்துடன் அற்புத விளக்கம்...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாராட்டுக்கு நன்றி ரூபன்.
DeleteIt looks awesome .got to try
ReplyDeleteமீன் ஊறுகாய் என்பது இதுவரை கேள்விப்படாததாக இருக்கிறது. வித்தியாசமான ருசி. நன்றி.
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்.
ReplyDeleteபுதுசா இருக்கே... கேரளாவில் இருந்து செம்மீன் ஊறுகாய் கொண்டுவருவார்கள்... சாப்பிட்டும் இருக்கிறேன்... நம்மூரில் மீன் ஊறுகாயா..?
ReplyDeleteபூண்டு ஊறுகாய் மாங்காய் ஊறுகாய் எலுமிச்சை ஊறுகாய் லாம் கேள்விப்பட்டு இருக்கோம், மீன் ஊறுகாய் புதுசா இருக்கே....
ReplyDeleteமுயற்சி செய்து பாருங்களேன் !
ReplyDeleteஎந்த வகை மீனில் செய்தால் நன்றாக இருக்கும் என சொல்லுங்கள் அம்மா
ReplyDelete