பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பட்டாணிப் பருப்பு - 1 கப் (Yellow Split Peas)
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் -2.
- கறிவேப்பிலை - சிறிது
- மல்லித்தழை - சிறிது
- காயம் - ஒரு சிட்டிகை
- உப்பு - தேவையானஅளவு
- எண்ணெய் - 100 மில்லி
- முதலில் பருப்பை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும் . வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, மல்லித்தழை ஆகியவற்றை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
- பருப்பு நன்றாக ஊறிய பிறகு தண்ணீரை வடித்துக் கொள்ளவும். 4 மேஜைக்கரண்டி பருப்பை தனியே எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள பருப்புடன் காயம், உப்பு சேர்த்து கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை எல்லாவற்றையும் பருப்புக்கலவையில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும், மிதமான சூட்டில் வைத்து, ஒரு சிறு உருண்டை அளவு மாவை எடுத்து லேசாக தட்டி எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
- பிறகு அதை திருப்பி போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும். பருப்பு வடை ரெடி. வடைகளை டிஸ்யூ பேப்பரில் போட்டு 5 நிமிடங்கள் கழித்து டீ/காபியுடன் பரிமாறவும். ஒரு கப் பருப்புக்கு 8 வடைகள் வரை சுடலாம்.
crispy and yummy vadas
ReplyDeleteSuper
ReplyDelete