பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பச்சரிசி - 1 கப்
- வெல்லம் - 2 கப்
- தேங்காய் துருவல் - 100 கிராம்
- முந்திரிப் பருப்பு - 10
- காய்ந்த திராட்சை - 10
- ஏலக்காய்த் தூள் - 1 மேஜைக்கரண்டி
- நெய் - 4 மேஜைக்கரண்டி
- பச்சரிசியை மிக்ஸ்சியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
- அரிசியை நன்கு கழுவி 3 கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சையையும் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- ஊற வைத்த அரிசி மற்றும் தண்ணீரை குக்கரில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். முதல் விசில் வந்ததும் சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் 50 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர் கொதித்து வெல்லம் நன்றாக கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு வெல்ல பாகை வடிகட்டிக் கொள்ளவும்.
- குக்கரில் வேகவைத்த சாதத்துடன் வெல்லப்பாகை ஊற்றி நன்கு கிளறி விட்டு அடுப்பை ஆன் செய்து சிம்மில் வைக்கவும். பின்னர் முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்ச்சையைப் போட்டு கிளறி மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவலைப் போட்டு நன்கு கிளறி கட்டியாக ஆனதும் இறக்கி விடவும். சுவையான சர்க்கரைப் பொங்கல் ரெடி.
- அரிசியை 3 கப் தண்ணீர் சேர்த்து வேக வைப்பதுக்கு பதிலாக தேங்காய் பால் 2 கப் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்தும் வேக வைக்கலாம். இவ்வாறு செய்யும் போது தேங்காய் துருவலை தவிர்த்து விடலாம்.
chakkarai pongal tips and recipe super mam , this pongal is your receipe
ReplyDeletein our house
Thank you
ReplyDeleteSuper
ReplyDeleteSuper recipes
ReplyDeleteThank you
ReplyDelete