Wednesday, April 10, 2013

மாங்காய்த் தொக்கு / Mango Thokku


தேவையான பொருள்கள் -
  1. மாங்காய் - 2 (நடுத்தர அளவு)
  2. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
  3. நல்லெண்ணெய் - 8 மேஜைக்கரண்டி
  4. காயம் - 1 தேக்கரண்டி
  5. வெந்தயத் தூள் -2 தேக்கரண்டி
  6. சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
செய்முறை -
  1. முதலில் மாங்காய்களை தண்ணீரில் கழுவி ஒரு துணியால் நன்றாக துடைத்துக் கொள்ளவும். சிறிதும் ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளவும். பின் தோலுரித்து துருவியில் வைத்து துருவிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து 8 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சிம்மில் வைத்து மாங்காய்த் துருவலைப் போட்டு 15 நிமிடங்கள் வரை நன்கு சுருள வதக்கவும்.
  3. பின்னர் மிளகாய்த்தூள், காயத்தூள், வெந்தயத்தூள், உப்பு போட்டு 3 நிமிடங்கள் வரை வதக்கி இறுதியில் சர்க்கரையை போட்டு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  4. மாங்காய்த் தொக்கு ரெடி. இதை காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். இந்த தொக்கு தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
குறிப்புகள்  -
  1. தொக்கை வெளியே வைத்திருந்ததால் 4 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பிரிஜ்ஜில் வைத்து உபயோகித்தால் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும். 

1 comment:

  1. It is okay to add jaggery in place of sugar??

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...