பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- கேரட் - 100 கிராம்
- பீன்ஸ் - 100 கிராம்
- காய்ந்த பட்டாணி - 50 கிராம்
- உருளைக்கிழங்கு - 1
- தக்காளி - 1
- மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
- மல்லித் தூள் -2 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் -3 மேஜைக்கரண்டி
- சோம்பு - 1 தேக்கரண்டி
- பூண்டு - 3 பல்
- இஞ்சி - 1 இன்ச் அளவு
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பட்டை - 1 இன்ச் அளவு
- கிராம்பு - 1
- லவங்கம் - பாதி
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- காய்ந்த பட்டாணியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பின் தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். தக்காளியை பொடிதாக நறுக்கி வைக்கவும். கேரட், உருளைக்கிழங்கு, பீன்சை பொடிதாக நறுக்கி கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
- கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை குக்கரில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை நன்கு வடித்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, லவங்கம் போட்டு தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளியைப் போட்டு நன்கு சுருள வதக்கவும்.
- பின் வேக வைத்த காய்கள், பட்டாணியுடன், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி 300 மில்லி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து குருமா கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சப்பாத்தி குருமா ரெடி.
சப்பாத்தி குருமா அருமையோ அருமை.
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி.
ReplyDeleteதயிர் சேர்க்காம மஞ்சள் கலரில் வந்திருக்கே. இதே மாதிரிதான் வருமா? விரைவில் செய்துபார்க்கிறேன். செய்முறை எளிதுதான்
ReplyDeleteKirambu 1 lavangam paadhi koduthirukirirgal. Lavangam yena kirambu yena puriyavilai solunga mam
ReplyDeletenice mam
ReplyDeleteThank you
ReplyDelete