தேவையானபொருள்கள் -
- அதிகம் புளிக்காத தயிர் - 2 கப் ( 400 மில்லி )
- மல்லித்தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 3
- பச்சை மிளகாய் - 2
- சீரகம் - 1 மேஜைகரண்டி
- பொட்டுக் கடலை - 2 மேஜைக்கரண்டி
- எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும். மிகவும் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கடைந்து கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸ்யில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, அரைத்த கலவையைப் போட்டு 1 நிமிடம் கிளறவும்.
- பிறகு தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் மல்லித் தழையைப் போட்டு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான மோர்க்குழம்பு ரெடி.
No comments:
Post a Comment