பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தேவையான பொருள்கள் -
- சேமியா - 2 கப்
- தண்ணீர் -11/2 கப்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் -1/2
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - 1 இன்ச் அளவு
- கறிவேப்பிலை - சிறிது
- சேமியாவை உடைத்து கடாயில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், இஞ்சி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் 11/2கப் தண்ணீரோடு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் சேமியாவைப் போட்டு அடிப் பிடிக்காமல் நன்கு கிளறவும். சேமியா நன்கு வெந்ததும் இறக்கி விடவும். சேமியா உப்புமா ரெடி.
No comments:
Post a Comment