பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தேவையான பொருள்கள் -
- உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
- மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
- மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையானஅளவு
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1/2
- கறிவேப்பிலை - சிறிது
- உருளைகிழங்கை தோல் உரித்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் வெட்டிவைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
- கிழங்கு பொன்னிறமானதும் மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
- பிறகு அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலையைப் போட்டு பொரித்து உருளைக்கிழங்கு துண்டுகள் மேல் பரப்பி விடவும்.
- நான்-ஸ்டிக் கடாய் வைத்து ப்ரை பண்ணினால் அடிப்பிடிக்காமல் நன்றாக வரும்.
No comments:
Post a Comment