பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- மாவத்தல் அல்லது மாந்தொலி - 1
- சாம்பார் பொடி -1 1/2 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- புளி - சிறு கோலி அளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 4
- கறிவேப்பிலை - சிறிது
- அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும். புளியை 1 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டுத் தாளிக்கவும்.
- தாளித்ததும் புளியைக் கரைத்து கடாயில் ஊற்றவும்.கொதித்தவுடன் சாம்பார் பொடி, மாவத்தல், மஞ்சள்தூள், உப்பு போட்டு 10 நிமிடங்கள் அல்லது மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.
- பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். மாவத்தல் குழம்பு ரெடி.
- மாவத்தல் என்பது காய்ந்த மாங்காய் துண்டுகள். தேவையான அளவு மாங்காய் வாங்கி தோல் சீவாமல் 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மாங்காய் துண்டுகள் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதன்பின் எல்லா மாங்காய் துண்டுகளையும் வெயிலில் 2 நாட்கள் வரை காய வைக்கவும். இதை மாவத்தல்/மாந்தொலி என்று சொல்லுவார். மாவத்தலை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து ஒரு ஆண்டு வரையிலும் வைத்து உபயோகிக்கலாம் .
No comments:
Post a Comment