Wednesday, April 10, 2013

முட்டை பொடிமாஸ்



பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை - 4
  2. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. ரீபைண்டு எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  2. கடுகு -1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு 1/2- தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1(சிறியது)
  5. பச்சை மிளகாய் - 1
  6. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. முதலில் முட்டைகளை உடைத்து கிண்ணத்தில் ஊற்றி உப்பு போட்டு  நன்கு கலக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பில்லை, வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டுத் தாளிக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமாக ஆனதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் கலக்கி வைத்துள்ள முட்டைகளை ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி விடவும். முட்டை உதிரியாக வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
குறிப்புகள் -
  1. மிளகாய்க்கு பதிலாக மிளகாய்பொடி சேர்த்தும் செய்யலாம்.

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...