பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- புடலைங்காய் - 1/4 கிலோ
- முட்டை - 1
- மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1/2
- கறிவேப்பிலை - சிறிது
- புடலைங்காய், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி உதிரியாக வந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும்.
- அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் புடலைங்காய், உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கவும். காய் வெந்ததும் பொரித்து வைத்த முட்டையையும் மிளகுத்தூளையும் போட்டு ஒரு நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். புடலைங்காய் முட்டை பொரியல் ரெடி.
No comments:
Post a Comment