பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- முட்டைக் கோஸ் - ஒரு கப்
- கேரட் - ஒரு கப்
- தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
- துவரம் பருப்பு - 3 மேஜைக்கரண்டி
- மிளகாய் தூள் -1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1 (சிறியது )
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- குக்கரில் துவரம் பருப்பு மற்றும் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். முட்டைக் கோசை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவியில் துருவிக் கொள்ளவும். வெங்காயத்தை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். பின் உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து கோஸ், கேரட், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து 15 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.
- அதன்பின் மிளகாய்த்தூள் போட்டு 1 நிமிடம் வரை வதக்கி இறுதியில் தேங்காய்துருவல், அவித்த பருப்பு போட்டு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். கோஸ் கேரட் பொரியல் ரெடி.
No comments:
Post a Comment