பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- வாழைக்காய் - 1
- தக்காளி - 1/2
- பூண்டுப் பல் - 1
- மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- வெங்காயம் - 1/2
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் வாழைக்காயை தோல் சீவி, நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
-
வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் வரை வதக்கவும்.
- பின்னர் வாழைக்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.
- வாழைக்காய் நன்றாக வெந்ததும் மிளகாய்த் தூள் போட்டு 1 நிமிடம் வரை கிளறி இறக்கி விடவும். சுவையான வாழைக்காய் வதக்கல் ரெடி. இந்த வாழைக்காய் வதக்கல் சாத வகைககளுக்கு ஏற்ற சைடு டிஷ்.
No comments:
Post a Comment