தேவையான பொருள்கள் -
- மிளகாய் வத்தல் -100 கிராம்
- மல்லி - 150 கிராம்
- சீரகம் - 50 கிராம்
- மிளகு - 25 கிராம்
- கடலைப் பருப்பு - 25 கிராம்
- வெந்தயம் - 25 கிராம்
- கறிவேப்பிலை - 1 கப்
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், மல்லி, மிளகு, கடலைப்பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் தனித்தனியே போட்டு மிதமான சூட்டில் வைத்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- அடுப்பை ஆப் பண்ணி விட்டு கடாயில் இருக்கும் சூட்டில் கறிவேப்பிலையை போட்டு வறுத்து கொள்ளவும்.
- சீரகத்தை வறுக்க தேவை இல்லை. அதை வறுத்த பொருள்களுடன் சேர்த்து கலந்து விட்டு அனைத்தையும் ஆற விடவும்.
- ஆறிய பின் மிசினில் கொடுத்து அரைத்து கொள்ளவும். ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்து 5 மாதங்கள் வரை வைத்து உபயோகிக்கலாம்.
Thank u mam
ReplyDeleteOk
ReplyDelete