Friday, April 19, 2013

கொத்தமல்லித் துவையல்

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. மல்லித் தழை - 2 கப்
அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. புளி - நெல்லிக்காய் அளவு
  3. பூண்டுப் பல் - 3
  4. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு
  6. கறிவேப்பிலை - சிறிது
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  4. கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மல்லித் தழையை சிம்மில் வைத்து வதக்கவும். லேசாக வதக்கி மல்லி சுருங்கியதும் இறக்கி விடவும். 
  2. வதக்கிய மல்லித் தழையுடன் அரைக்க கொடுத்தவற்றை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி விட்டு பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.
  3. அதே கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து துவையலுடன் சேர்க்கவும்.
  4. சுவையான கொத்தமல்லித் துவையல் ரெடி. இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

3 comments:

  1. மல்லித்துவையலில் பூண்டு சேர்த்து அரைத்ததில்லை.. செய்துபார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  2. வித்யாசமான செய்முறையா இருக்குங்க...நானும் //மல்லித்துவையலில் பூண்டு சேர்த்து அரைத்ததில்லை..// :) செய்து பார்த்து சொல்கிறேன்!

    ReplyDelete
  3. மல்லித் துவையல் செய்முறை வேறு மாதிரி இருக்கிறது.
    உங்கள் செய்முறைபடி செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...