தீபாவளி ஸ்பெஷல் !!!

Tuesday, April 30, 2013

பொங்கல்

பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையானபொருள்கள் -
 1. பச்சரிசி - 2 கப் (400 கிராம்)
 2. பாசிப் பருப்பு - 1 கப் (200 கிராம்)
 3. மிளகு - 1 தேக்கரண்டி
 4. சீரகம் - 1 தேக்கரண்டி
 5. முந்திரிப் பருப்பு - 10
 6. மல்லித் தழை - சிறிது
 7. நெய் - 3 மேஜைக்கரண்டி
 8. உப்பு - தேவையானஅளவு 
செய்முறை -
 1. பச்சரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி வைக்கவும்.
 2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
 3. அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகத்தை வறுத்து எடுக்கவும்.
 4. அடுப்பில் குக்கரை வைத்து பச்சரசி, பாசிப் பருப்பு, வறுத்த முந்திரிப் பருப்பு, வறுத்த மிளகு, சீரகம், உப்பு மற்றும் 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணி விடவும்.
 5. நீராவி அடங்கியதும் மூடியைத் திறந்து பொங்கலுடன் மல்லித் தழை, 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிளறவும். சுவையான பொங்கல் ரெடி. சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...