Thursday, April 25, 2013

புடலைங்காய் பொரியல்

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. புடலைங்காய் - 1/4 கிலோ
  2. வறுத்த வேர்க்கடலைப் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
  3. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1/2
  5. பச்சை மிளகாய் - 2
  6. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. புடலைங்காய், வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். வேர்க்கடலைப் பருப்பை மிக்ஸ்யில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.
  3. வெங்காயம் பாதி வதங்கியதும் புடலங்காய், உப்பு சேர்த்து  மிதமான சூட்டில் வைத்து காய் வேகும் வரை நன்கு வதக்கவும்.
  4. காய் வெந்ததும் வேர்க்கடலைப் பொடியை தூவி ஒரு நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...