Tuesday, June 21, 2016

ராஜ்மா மசாலா / Rajma Masala


பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. ராஜ்மா - 1 கப் ( 200 கிராம் )
  2. தக்காளி - 1
  3. இஞ்சி துருவியது - மேஜைக்கரண்டி 
  4. பூண்டு துருவியது - 1 மேஜைக்கரண்டி 
  5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  6. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  7. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  8. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
  9. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
  10. மல்லித்தழை - சிறிது 
  11. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
  1. ராஜ்மாவை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற  வைக்கவும்.
  2. ஊறிய பிறகு ராஜ்மாவுடன் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.
  3. வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும். தக்காளியை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் துருவி வைத்துள்ள இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும்  அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.
  6. தக்காளி நன்கு வெந்ததும் அதனுடன் மிளகாய்  தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து  அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ராஜ்மா வேக வைத்த தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  7. பச்சை வாடை போனதும் அவித்து வைத்துள்ள ராஜ்மாவை சேர்க்கவும்.
  8. மசாலா கெட்டியானதும் கரம் மசாலா, மல்லித்தழை சேர்த்து உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.
  9. சுவையான ராஜ்மா மசாலா ரெடி. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Sunday, June 12, 2016

மீன் குழம்பு - 2 / Fish Curry


பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வஞ்சீரம் மீன் - 1/4 கிலோ 
  2. தக்காளி - 1
  3. புளி - சிறிய எலுமிச்சை அளவு 
  4. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. மல்லித்தூள் - 3 மேஜைக்கரண்டி 
  6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 6 மேஜைக்கரண்டி 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. வெந்தயம் - 1 தேக்கரண்டி 
  4. சின்ன வெங்காயம் - 15
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. மீனை நன்றாக கழுவி வைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். தேங்காயை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  2. புளியை தண்ணீரில் ஊற வைத்து ஒரு கப் அளவுக்கு கரைத்து வைக்கவும்.
  3. அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெந்தயம் போடவும். 
  4. வெந்தயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து  மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
  6. பிறகு அதனுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  7. மசாலா வாடை அடங்கியதும் தேங்காய் கலவையை சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து மீன் துண்டுகளை சேர்க்கவும்.
  8. மீன் வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சுவையான மீன் குழம்பு ரெடி.

Thursday, June 2, 2016

கோவைக்காய் பொரியல் / Tindora Fry


பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள்-
  1. கோவைக்காய் - 300கிராம் 
  2. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
  5. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  6. மல்லித்தழை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. கோவைக்காயை வட்டவட்டமாகவும் வெங்காயத்தை பொடிதாகவும் நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு போடவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள கோவைக்காயை சேர்த்து 2 நிமிடம் நன்றாக கிளறி அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
  4. தண்ணீர் வற்றி காய் வெந்ததும் மிளகாய் தூள் சேர்த்து எல்லா இடங்களிலும் படுமாறு நன்கு கிளறவும். இறுதியில் தேங்காய் துருவல், மல்லித்தழை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான கோவைக்காய் பொரியல் ரெடி. சாம்பார் சாதம், புளிக்குழம்பு சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...