நான் வலைப்பூ ஆரம்பித்து இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டு தொடங்குகிறது. நான் இது வரை 308 பதிவுகள் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பதிவுகளை பார்த்து கருத்து சொன்ன நட்புள்ளங்களுக்கும், சில பதிவுகளை செய்து பார்த்து கருத்து சொன்ன நட்புள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல நாளில் ஈஸியான தேங்காய் பர்பி ஸ்வீட் பதிவு !!
தேவையான பொருட்கள் -
- துருவிய தேங்காய் - 1 கப்
- சர்க்கரை - 3/4 கப்
- பால் அல்லது தண்ணீர் - 1/4 கப்
- ஏலக்காய் தூள் - சிறிது
- நெய் - 1 அல்லது 2 மேஜைக்கரண்டி
- தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். டிரேயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி எல்லா இடங்களிலும் படும்படி தடவி வைக்கவும்.
- அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாயை வைத்து தேங்காய் துருவல், சர்க்கரை, பால் அல்லது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து கிளற ஆரம்பிக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக வற்ற ஆரம்பிக்கும். அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். பிடித்தால் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
-
இப்பொது ஏலக்காயை சேர்த்துக் கொள்ளவும். நன்றாக வற்றி சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- நெய் தடவிய டிரேயில் பரப்பி விடவும். நன்றாக ஒரு தோசை கரண்டியை வைத்து அழுத்தி பரப்பி கொள்ளுங்கள்.
- சிறிது நேரம் கழித்து பர்பி லேசான சூட்டில் இருக்கும் போது ஒரு கத்தியை வைத்து துண்டுகளாக கட் செய்து கொள்ளுங்கள். சுவையான தேங்காய் பர்பி ரெடி.
- முந்திரிப்பருப்பு சேர்க்க விரும்பினால், ஒரு தேக்கரண்டி நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து பர்பியில் ஏலக்காய் தூள் சேர்க்கும் போது அதையும் சேர்த்துக் கொள்ளவும்.
வாவ்...வாழ்த்துக்கள் அம்மா...உங்களின் நிறைய ரெசிப்பீஸ் செய்து பார்த்திருக்கேன்.. அனைத்தும் அருமை.. செய்து பார்த்த ரெசிப்பிக்களின்பட்டோவும் அனுப்பியிருக்கேன்.. மேலும் வளர வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉடன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அபி. நீ செய்து பார்த்து எனக்கு அனுப்பிய ரெசிப்பி போட்டோஸ் எல்லாம் save பண்ணி வைத்திருக்கிறேன்.
Deleteஅருமையான இனிப்புடன் இன்றைய பதிவு..
ReplyDeleteமேலும் பல பதிவுகளை வழங்க வேண்டும்.. நல்வாழ்த்துகள்..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.
ReplyDeleteவாழ்த்துக்கள் மா,,, அருமையான பதிவு, நான் இப்போவெல்லாம் சில வகையறாக்கள் செய்கிறேன் என்றால் தங்கள் பதிவுகளால் தான்,,, சூப்பர்மா செய்து பார்க்கிறேன். இன்னும் பல பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள், தொடருங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி மகேஸ்வரி.
Deleteவாழ்த்துகள் சகோ. மேலும்,மேலும் நிறைய பதிவுகள் தொடரட்டும்.
ReplyDeleteஇனிப்பான தேங்காய் பர்பியின் மணம்.....
சுவைக்க துண்டுகிறது...ஆனா..முடியாதே....
ஹிஹிஹி செய்து தான் சாப்பிடனும்.....
வாழ்க வளமுடன்...
வாழ்த்துக்கு நன்றி சகோ.
Deleteதேங்காய் பர்பி அருமை சகோ.
ReplyDeleteநாவிற்கு நற்சுவைகளை அள்ளித் தந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சகோவின் தளம், நாடு போற்றும் நல்ல விடயங்களை தர எமது வாழ்த்துகள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.
ReplyDeleteவாழ்த்துகள் அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி தனபாலன்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
இதோ செய்முறையை குறித்துக்கொண்டேன் நிச்சயம் நீங்கள் செய்த பதத்தில் வராது... சுவையான உணவு. நான்காம் ஆண்டு தொடக்கத்துக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தேங்காய் பர்பி பதம் உங்களுக்கும் நன்றாக வரும். வாழ்த்துக்கு நன்றி ரூபன்.
Deleteவாழ்த்துக்கள் அக்கா 4ம் ஆண்டு ஆரம்பத்துக்கு.இன்னும் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்>
ReplyDeleteஆஹா தேங்காய் பர்பி பார்க்கவே நல்லாயிருக்கு.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பிரியசகி.
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteதேங்காய் பர்பி
சமைத்து பார்க்கிறேன்...
அருமையான விளக்கம்
நன்றி அம்மா....
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அஜய்.
ReplyDeleteWow..my favorite sweet.....congrats ...
ReplyDeleteIndia vandhurukken ma.....
Thank you Shamee. India visit ethani mathangal Shamee?
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteஅப்ப அப்ப வாசிக்கிறேன்...
வேலை அதிகம்... அதனால்தான் அதிகம் வலையில் வலம் வர முடிவதில்லை... இருந்தும் எப்படியும் வாசித்துவிடுவேன்...
மன்னியுங்கள் அம்மா... காலம் தாழ்ந்த வாழ்த்துக்கு...
தொடர்ந்து எழுதுங்கள்...
மன்னிப்பு எல்லாம் எதற்கு ? முதலில் ஆபீஸ் வேலை தான். எனவே நேரம் கிடைக்கும் போது கருத்திட வாருங்கள். வாழ்த்துக்கு நன்றி குமார்.
ReplyDeleteதேங்காய் பர்பி செஞ்சுட்டேன். செமையா இருந்துச்சு.
ReplyDeleteகிட்டத்தட்ட எல்லாம் காலி. புகைப்படம் எடுத்து வச்சுருக்கேன் மா.
நல்ல குறிப்பு குடுத்ததற்கு நன்றி...
ஆஹா தேங்காய் பர்பி செய்து பார்த்து பின்னூட்டம் அளித்த ஷமீக்கு நன்றி.
ReplyDeleteSuperb....keep on gng....
ReplyDeletenice and useful keep posting
ReplyDeleteThank you
DeleteWishes mam
ReplyDeleteThank you
Deleteuseful and nice
ReplyDelete