Thursday, February 26, 2015

முட்டை 65 / Egg 65


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை - 2
  2. சோளமாவு - 2 மேஜைக்கரண்டி 
  3. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  5. புட் கலர் - 1/4 தேக்கரண்டி 
  6. தயிர் - 1 மேஜைக்கரண்டி 
  7. மல்லித்தழை - சிறிது 
  8. உப்பு - தேவையான அளவு
  9. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு                                           
செய்முறை -
  1. ஒரு பாத்திரத்தில் முட்டைகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். 10 நிமிடங்களில் முட்டை வெந்து விடும். பிறகு முட்டைகளின் ஓட்டை எடுத்து நான்காக வெட்டி வைக்கவும்.
                                                                                    
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய் தூள், புட்கலர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  3. அதோடு வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து மஞ்சள் கரு கிழே விழாமல் மெதுவாக கலவை எல்லா இடங்களிலும் படும் படி சேர்த்து  அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
                                                                       
  4. ஊறிய பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு முட்டை துண்டுகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் மெதுவாக திருப்பி போடவும். 
                                                                                
  5. இருபுறமும் வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்  எண்ணெய் உறுஞ்சியவுடன் மல்லித்தழை தூவி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான முட்டை ப்ரை ரெடி.

Friday, February 20, 2015

அபியும் நானும் !!!

                                

அபியும் நானும் என்றால் எனது பேரன் அபிநவ்வும், நானும் தான்!   என் பேரனுடன் நான்  சந்தோஷமாக இருந்தததை உங்கள் எல்லோரிடம் பகிர்ந்து கொள்ள நினைத்து இதை எழுதுகிறேன்.

அமெரிக்காவிலிருக்கும் என்னுடைய பேரனும், மகளும் கடந்த நவம்பர் மாதம் எங்கள் ஊருக்கு வந்து  இரண்டு மாதங்கள் வரை இருந்தார்கள். அபிநவ் என்னுடன் இருக்கும் போது எனக்கு நேரம் போவதே தெரியாது.

என்னுடைய சமையலில் அவனுக்கு பிடித்தத டிபன் இட்லி, இடியாப்பம், பூரி, சப்பாத்தி போன்றவையாகும். இதை தவிர மேகி நூடுல்ஸ் பிடிக்கும். குழம்பு வகைகளில் காளான் குழம்பு மிகவும் பிடிக்கும்.

Ipad-ல் சில விளையாட்டுகளை விரும்பி விளையாடுவான். அவன் விளையாடும் போது என்னையும் பக்கத்தில் இருந்து பார்க்கச் சொல்வான். சில விளையாட்டுக்களை எனக்கும் சொல்லிக் கொடுப்பான். எனக்கும் அவனுடன் சேர்ந்து விளையாடுவது மிகவும் சந்தோஷமாக இருக்கும். டீ கப்பில் கலர் பால் வைத்து ஐஸ் கிரீம் என்று சொல்லி விளையாடுவான். அபியும் நானும் சில நேரங்களில் தோட்டத்தை ஒரு முறை சுற்றி வருவோம். அபிக்கு மண்வெட்டி வைத்து தோண்டி விளையாடுவதும் பிடிக்கும்.
                                                                            
 கோலம் போட்டு விளையாடுவதையும் மிகவும் விரும்புவான். திருக்கார்த்திகை அன்று அவனுடைய அம்மா போட்ட கோலத்தை மிகவும் ரசித்து பார்த்தான். அன்று என்னுடைய அம்மாவும் வந்திருந்தாங்க.திருக்கார்த்திகை அன்று இனிப்பு கொழுக்கட்டை செய்து சாமிக்கு படைத்தது அபியுடன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடினோம்.                                                                                                               
                                                                         
தினமும் என்னுடன்  கடைக்கு  வந்து ஒரு கிண்டர் ஜாய் வாங்கி கொள்வான். ஒரே கடையில் வாங்குவதால் அந்த கடைக்கு same shop என்று பெயர் வைத்திருந்தான். எங்கள் தெருவில் கிறிஸ்தவர்கள் நிறைய பேர் இருப்பதால் எல்லோருடைய வீட்டிலும் ஸ்டார் போட்டிருந்தார்கள். அபியும், நானும் எனது மகளும் சூப்பர் மார்க்கெட் சென்று ஸ்டார் வாங்கி எங்கள் வீட்டிலும் போட்டிருந்தோம். மேலும் சில கடைகள், பொருட்காட்சி என்று அவனுடன் சென்று வந்தோம்.

டிசம்பர் மாதம் அபிநவ் அப்பாவும் இங்கு வந்துட்டாங்க. அப்பாவுடன் அபிநவ் சந்தோஷமாக பொழுதை கழித்தான். எனக்கும் எல்லோரும் இங்கு இருந்தது நேரம் போனதே தெரியவில்லை.
பொங்கலுக்கு கடைக்கு சென்று எல்லோருக்கும் டிரெஸ் வாங்கி வந்தோம். அபிக்கு வேஸ்டி, சட்டை,  அங்கவஸ்திரம்  என்று செட் ஆக எடுத்தோம்.

    அபிநவ் பொங்கல் டிரெஸ்சில்                                                                                   
பொங்கல் முடிந்தவுடன் மகள், மருமகன், பேரன் எல்லோரும் ஊருக்கு சென்று விட்டார்கள். என்னுடைய சந்தோஷத்தை உங்கள் எல்லோரிடம் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி
சாரதா 

Sunday, February 15, 2015

நெல்லிக்காய் ஜாம் / Amla Jam


தேவையான பொருள்கள் -
  1. நெல்லிக்காய் - 1/4 கிலோ 
  2. அச்சு வெல்லம் - 300 கிராம் 
  3. சுக்கு - சிறிய துண்டு 
  4. ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. புட் கலர் - சிறிது 
                                                              செய்முறை -
  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து நெல்லிக்காய் நன்றாக வெந்ததும் அடுப்பை அனைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து சிறிது நேரம் ஆற விடவும். 
                                                                     
  2. ஆறிய பிறகு நெல்லிக்காய்யை வெட்டி அதிலுள்ள கொட்டைகளை நீக்கி விடவும். பிறகு அதை மிக்ஸ்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். சுக்கை பொடி பண்ணி வைக்கவும்.
                                      
  3. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் அச்சு வெல்லம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். அதோடு அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் விழுதை சேர்த்து கெட்டிப்பதம் வரும் வரை கிளறவும்.
                                      
  4. இறுதியில் சுக்குத்தூள், ஏலக்காய் தூள் இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான நெல்லிக்காய் ஜாம் ரெடி.

Tuesday, February 10, 2015

ஆப்பிள் சட்னி / Apple Chutney


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. ஆப்பிள் - 1
  2. காய்ந்த திராட்சை - 10
  3. மிளகாய் வத்தல் - 2
  4. கடலைப் பருப்பு - 2 மேஜைக்கரண்டி 
  5. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு                                                                                      
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/ 2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் ஆப்பிளை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
                                                                                                     
  2. அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஆப்பிளை போட்டு வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
                                                                      
  3. பிறகு ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி  சூடானதும் மிளகாய்வத்தலை வறுத்து ஆப்பிளோடு சேர்த்து வைக்கவும். பிறகு அதே எண்ணெயில் கடலைப்பருப்பு, காய்ந்த திராட்சை இரண்டையும் தனித் தனியாக வறுத்து ஆப்பிளோடு சேர்த்து சிறிது நேரம் ஆறவிடவும்.
                                                                            
  4. நன்கு ஆறியதும் அதோடு தேங்காய் துருவல், மற்றும் உப்பு சேர்த்து மிச்சியில் அரைக்கவும்.
                                                                               
  5. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். 
  6. சுவையான ஆப்பிள் சட்னி ரெடி. ஆப்பிள் சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Monday, February 2, 2015

சில்லி சப்பாத்தி / Chilli Chapathi


தேவையான பொருள்கள் -
  1. சப்பாத்தி - 4
  2. பெரிய வெங்காயம் - 2
  3. தக்காளி - 1
  4. பச்சை மிளகாய் - 1
  5. தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி 
  6. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  7. சிவப்பு புட் கலர் - சிறிது 
  8. மல்லித்தழை - சிறிது 
  9. உப்பு - சிறிது 
  10. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
செய்முறை -
  1. சப்பாத்தி, தக்காளி, வெங்காயம் மூன்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.                                                                  
  2. புட் கலரை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.                                                                    
  4. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தக்காளி சாஸ், கரைத்து வைத்துள்ள கலர் தண்ணீர் எல்லாவற்றயும்  சேர்த்து  ஒரு நிமிடம் கிளறவும்.  
                                                                                        
  5. பிறகு அதனுடன் சப்பாத்தி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறுதியில் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.
                                                                                                                                             
  6. சுவையான சில்லி சப்பாத்தி ரெடி. மீந்து போன சப்பாத்தியை இவ்வாறு செய்து சுவையாக சாப்பிடலாம். 
Related Posts Plugin for WordPress, Blogger...