Thursday, May 16, 2013

தேன்குழல் முறுக்கு


தேவையான பொருள்கள் -
  1. புழுங்கல் அரிசி - 2 கப் (400 கிராம்)
  2. வெள்ளை உளுந்து -100கிராம் (பாதியாக உடைத்த வெள்ளை உளுந்து)
  3. பொட்டுக் கடலை - 50 கிராம்
  4. கறுப்பு எள் - 1 மேஜைக்கரண்டி
  5. சீரகம் - 1 மேஜைக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு
  7. எண்ணெய் - 500 மில்லி அல்லது தேவையானஅளவு
செய்முறை -
  1. அரிசியை நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பின் அரிசி மற்றும் உப்பை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். நடுநடுவே தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து உளுந்தம் பருப்பை போட்டு லேசாக வறுத்து கொள்ளவும். நன்றாக ஆறியவுடன் மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  4. பொட்டுக் கடலையை மிக்ஸ்யில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  5. அரைத்து வைத்துள்ள அரிசி மாவோடு உளுந்தம் பருப்பு பொடி, பொட்டுக் கடலை பொடி, எள், சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிசையவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து தேவையான அளவு மாவை எடுத்து முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக பிழியவும்.
  7. ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் கழித்து முறுக்கை திருப்பி போடவும். எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன் அல்லது இரண்டு புறமும் பொன்னிறமாக ஆனவுடன் ஒரு கம்பி கொண்டு முறுக்குகளை எடுத்து வடிதட்டில் போட்டு வைக்கவும். எண்ணெய் நன்றாக வடிந்தவுடன் பரிமாறவும். சுவையான முறுக்கு ரெடி.

Monday, May 13, 2013

பிடி கொழுக்கட்டை / Pidi Kozukkatai


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. புழுங்கல் அரிசி - 200 கிராம்
  2. உப்பு - தேவையானஅளவு
  3. தேங்காய்துருவல் - 100 கிராம்
தாளிக்க -
  1. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  2. கடுகு - 2 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
  4. மிளகாய் வத்தல் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. அரிசியை கழுவி தேவையான அளவு தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பின் அரிசி,தேங்காய் துருவல் மற்றும் உப்பை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். நடுநடுவே தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். 
  3. அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  4. பிறகு அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி மாவு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். 
  5. கடாயிலிருந்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். எலுமிச்சம்பழம் அளவு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  6. ஒவ்வொரு உருண்டையையும் ஓவல் சைஸ்ஸில் பிடி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லித் தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும். 20 கொழுக்கட்டை வரை வரும்.
  7. கொழுகட்டையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.

ரசம் /Rasam


பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. புளி - எலுமிச்சை அளவு அல்லது புளி பேஸ்ட் - 5 மேஜைக்கரண்டி
  2. தக்காளி - 1 (சிறியது)
  3. மிளகு - 1 தேக்கரண்டி
  4. மல்லி - 1 தேக்கரண்டி
  5. சீரகம் - 1 தேக்கரண்டி
  6. பூண்டுப் பல் - 5
  7. காயம் - 1/4 தேக்கரண்டி
  8. உப்பு - தேவையான அளவு
  9. மல்லித் தழை - சிறிது
  10. கறிவேப்பில்லை - சிறிது                                
தாளிக்க -
  1. கடுகு - 1 தேக்கரண்டி
  2. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  3. மிளகாய் வற்றல் - 1
செய்முறை -
  1. புளியை 400 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். அல்லது புளி பேஸ்டை 5 மேஜைக்கரண்டி எடுத்து 400 மில்லி தண்ணீரில் போட்டு கலக்கிக் கொள்ளவும்.
  2. தக்காளியை புளித் தண்ணீரில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மிளகு, மல்லி, சீரகம், பூண்டுப் பல் எல்லாவற்றையும் மிக்ஸ்யில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.               
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் மிளகாய் வத்தல் போட்டு தாளிக்கவும். 
  4. தாளித்ததும் காயம், பொடித்து வைத்துள்ள பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறி புளித் தண்ணீரை ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்கவும். கறிவேப்பிலை, மல்லித் தழையை தூவி நுரை வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  5. ஒரு பாத்திரத்தில் உப்பை போட்டு கடாயிலுள்ள ரசத்தை அதனுள் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான ரசம் ரெடி.

Friday, May 10, 2013

சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

பரிமாறும் அளவு - 2 நபருக்கு


தேவையான பொருள்கள் -
  1. சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ
  2. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
  3. மல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி
  4. வேர்க்கடலைத் தூள் - 2 மேஜைக்கரண்டி
  5. உப்பு - தேவையானஅளவு                             
வறுத்து பொடிக்க -
  1. பட்டை - 1 இன்ச்
  2. கிராம்பு - 1
  3. சோம்பு - 1 தேக்கரண்டி                            
தாளிக்க -
  1. எண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது
  6. மல்லித் தழை - சிறிது                                     
 செய்முறை -
  1. வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பை போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.                           
  2. ஒரு பாத்திரத்தில் சேப்பங்கிழங்கை போட்டு அது முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும். பாதி வெந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும். தண்ணீரை நன்கு வடித்து விட்டு ஆற விடவும். ஆறிய பின் தோலுரித்து வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.             
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.          
  4. வெங்காயம் பாதி வதங்கியதும் சேப்பங்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. சேப்பங்கிழங்கு நல்ல பொன்னிறமானதும் மிக்சியில் பொடித்த தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.                 
  6. இறுதியில் வேர்க்கடலைத் தூள், மல்லித் தழை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ரெடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
குறிப்புகள் -
  1. வேர்க்கடலைத் தூள் - வறுத்த வேர்க்கடலைப்பருப்பை மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். இதை பொரியல், ரோஸ்ட் வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

முட்டை பொரியல்



பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. முட்டை - 4
  2. மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
  3. கறிமசால் பொடி - 1/2 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. தக்காளி - 1 (சிறியது)
  6. உப்பு - தேவையானஅளவு
தாளிக்க -
  1. எண்ணெய் -4 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  3. வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளியைப் போட்டு நன்கு சுருள வதக்கவும்.
  4. பின்னர் உடைத்த முட்டை, உப்பு சேர்த்து உதிரியாகும் வரை நன்கு கிளறவும். நன்கு உதிரியாக வந்தவுடன் மிளகாய்த் தூளை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
  5. இறுதியில் கறிமசால் பொடி சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான முட்டை பொரியல் ரெடி.

Tuesday, May 7, 2013

முட்டை ஆம்லெட்


பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. முட்டை - 4
  2. சின்ன வெங்காயம் - 50 கிராம்
  3. மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
  4. உப்பு - தேவையானஅளவு
  5. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. சின்ன வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை ஆப் பண்ணி விடவும்.
  3. வதக்கிய வெங்காயம், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றை முட்டையோடு சேர்த்து நன்றாக நுரை வரும்படி கலக்கி வைக்கவும்.
  4. அடுப்பில் ஒரு தோசைக் கல்லை வைத்து சூடானதும் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு மாவுக் கரண்டி அளவு முட்டைக் கலவையை எடுத்து பரப்பி ஊற்றவும். 1 நிமிடம் ஆனதும் மாற்றிப் போடவும். பொன்னிறமானதும் எடுத்து விடவும். மீதமுள்ள முட்டைக் கலவையையும் இதே போல் தோசைக் கல்லில் போட்டு எடுக்கவும். சுவையான ஆம்லெட் ரெடி.

ஹோட்டல் தோசை / Hotel Dosai


பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. புழுங்கல் அல்லது இட்லி அரிசி - 200 கிராம்
  2. பச்சரிசி - 200 கிராம்
  3. வெள்ளை முழு உளுந்து - 100 கிராம்
  4. கடலைப் பருப்பு - 25 கிராம்
  5. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு
செய்முறை -
  1. புழுங்கல் அரிசி, பச்சரிசி, முழு உளுந்து, கடலைப் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நன்றாக கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த அனைத்தையும் கிரைண்டரில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். நடு நடுவே தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு அரைத்த மாவை 10 மணி நேரம் புளிக்க விடவும்.
  4. பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக வார்த்து எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம்.

Saturday, May 4, 2013

மீன் வறுவல்

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. வஞ்சீரம் மீன் - 1/4 கிலோ
  2. மிளகாய்த் தூள் - 1 மேஜைக்கரண்டி
  3. மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
  5. உப்பு - தேவையானஅளவு
  6. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை -
  1. முதலில் மீனை நன்றாக கழுவி வைக்கவும். பிறகு சிறிதும் தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும். 
  2. மீன், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகுத் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறி 2 மணி நேரம் ஊற விடவும்.
  3. மீன் நன்றாக ஊறியதும் அடுப்பில் கடாய் அல்லது தோசைக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து 2 அல்லது 3 மீன் துண்டுகளைப் போட்டு வறுக்கவும்.
  4. 5 நிமிடம் கழித்து மீனை திருப்பி போட்டு வறுக்கவும். இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
  5. இதே போல் மற்ற மீன் துண்டுகளையும் வறுத்து எடுக்கவும். சுவையான மீன் வறுவல் ரெடி.

பூரி




பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கோதுமை மாவு  - 300 கிராம்
  2. ரவை - 1 தேக்கரண்டி
  3. வெந்நீர் - தேவையானஅளவு
  4. சூடான பால் - 50 மில்லி
  5. உப்பு - தேவையான அளவு
  6. எண்ணெய் - பொரிபதற்கு தேவையான அளவு
செய்முறை -
  1. ஒரு அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை மற்றும் 50 மில்லி பாலை ஊற்றி பிசையவும். பிறகு தேவையான அளவு வெந்நீரை சிறிது சிறிதாக சேர்த்து ஓரளவு கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும் .                             
  2. அரை மணி நேரம் கழித்து மாவை மீண்டும் ஒரு தடவை பிசைந்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக் கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.       
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் மிதமான சூட்டில் வைத்து பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும். இரு புறமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விட வேண்டும். 
குறிப்புகள் -
  1. எண்ணெய் நல்ல சூடாக இருக்க வேண்டும். எண்ணெய் சூடாகும் முன் பூரியைப் போட்டால் உப்பி வராது.
  2. மாவை பிசைந்து அதிக நேரம் வைத்தால் எண்ணெயை அதிகமாக உறிஞ்சி விடும்.

Wednesday, May 1, 2013

காலிபிளவர் பட்டாணி பொரியல்



பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. காலிபிளவர் - 1 கப்
  2. பச்சைப் பட்டாணி  - 1/2 கப்
  3. பச்சை மிளகாய் - 1
  4. மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1/2
  5. கறிவேப்பிலை - சிறிது
  6. கொத்தமல்லித் தழை - சிறிது
செய்முறை -
  1. வெங்காயத்தையும், காலிபிளவரையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். காய்ந்த பட்டாணி என்றால் 4 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 300 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள காலிபிளவரை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும். 5 நிமிடம் வெந்நீரில் காலிபிளவர் இருக்க வேண்டும். பிறகு தண்ணீரை நன்கு வடித்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் காலிபிளவர் சேர்த்து வேகும் வரை வதக்கவும்.
  4. நன்கு வெந்தவுடன் பட்டாணியை சேர்த்து கிளறி மிளகுத் தூள் போட்டு 1 நிமிடம் கிளறி கொத்தமல்லித் தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான காலிபிளவர் பட்டாணி பொரியல் ரெடி.

மொச்சைக் கூட்டு


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. மொச்சை - 100 கிராம்
  2. சாம்பார் பொடி - 1/2 மேஜைக்கரண்டி
  3. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  4. உப்பு - தேவையான அளவு                             
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 4
  3. தக்காளி - 1 சிறியது                                      
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. வெங்காயம் - 1/4
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. மொச்சையை 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.               
  2. ஊற வைத்த மொச்சையை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர்  ஊற்றி  அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வந்தததும்  இறக்கி விடவும். 5 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து தண்ணீரை நன்கு வடித்து வைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
  4. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் அவித்த மொச்சை, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்பு  சேர்த்து ஒரு நிமிடம் கிளறி 200 மில்லி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.      
  5. மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும். கூட்டு நன்றாக கெட்டியானதும் இறக்கி விடவும். மொச்சைக் கூட்டு ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...