Thursday, March 27, 2014

தயிர் சாதம் / Curd Rice



தேவையான பொருள்கள் -
  1. அரிசி - 100 கிராம் 
  2. தயிர் - 100 மில்லி 
  3. பால் - 100 மில்லி
  4. மல்லித் தழை - சிறிது
  5. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய்  - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பச்சை மிளகாய் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் அரிசியை நன்றாக கழுவி 250 மில்லி தண்ணீருடன் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  2. சாதம் நன்றாக ஆறிய பின் தயிர், பால் இரண்டையும் ஊற்றி ஒரு கரண்டியால் மசித்து வைக்கவும். ரொம்ப கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தளர்வாக இருக்க வேண்டும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. பச்சை மிளகாய் வதங்கியதும் கலந்து வைத்துள்ள தயிர் சாதத்தை சேர்த்து கிளறி, மல்லித்தழையை தூவி அடுப்பை அணைக்கவும். 
  5. உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். சுவையான தயிர்சாதம் ரெடி. ஊறுகாய் அல்லது துவையலுடன் பரிமாறலாம்.

Wednesday, March 26, 2014

சுசியம் / Susiyam

             
தேவையான பொருள்கள் -
  1. பச்சரிசி - 100 கிராம் 
  2. வெள்ளை முழு உளுந்து - 25 கிராம் 
  3. கடலைப்பருப்பு - 100 கிராம் 
  4. அச்சு வெல்லம் - 100 கிராம் 
  5. தேங்காய் துருவல் - 100 கிராம் 
  6. ஏலக்காய்தூள் - 1/4 தேக்கரண்டி
  7. உப்பு - 1/4 தேக்கரண்டி ( விருப்பப்பட்டால் )
  8. சோடா உப்பு - 1 தேக்கரண்டி 
  9. பொரிப்பதற்கு எண்ணைய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. பச்சரிசி, உளுந்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. கடலை பருப்பை தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. கிரைண்டரில் பச்சரிசி, உளுந்தம்பருப்பு மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தை விட கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  5. முக்கால் பதத்திற்கு வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும். நன்றாக ஆறிய பின் தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  6. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் 25 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டியில் வடித்துக் கொள்ளவும்.
  7. பிறகு அடுப்பில் கடாயை வைத்து வடித்து வைத்துள்ள சர்க்கரைப்பாகை ஊற்றவும். பாகு கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து  வைத்துள்ள கடலைப்பருப்பு கலவையை சேர்த்து கிளறவும்.
  8. கலவை கெட்டியானதும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.          
  9. பிறகு அரைத்து வைத்திருக்கும் மாவில் சோடா உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு உருண்டைகளை முக்கி வைக்கவும்.                               
  10. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் முக்கி வைத்துள்ள உருண்டைகளை போடவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக விடவும்.
  11. ஒரு புறம் வெந்ததும் ஒரு கம்பியால் மெதுவாக திருப்பி போடவும். இரு புறமும் நன்கு வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.                   
  12. மீதமுள்ள எல்லா உருண்டைகளையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். எண்ணைய் நன்கு உறிஞ்சியவுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும். சுவையான சுசியம் ரெடி.
குறிப்புக்கள்  -
  1. பச்சரிசி உளுந்த மாவுக்கு பதிலாக மைதா மாவிலும் செய்யலாம்.
  2. மாவுக்கலவை மீதமாக இருந்தால் அதில் பொடிதாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடிதாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கி ஒரு குழிக்கரண்டி வீதம் மாவு எடுத்து சூடான எண்ணையில் போட்டு சிவக்க சுட்டு எடுத்தால் கார போண்டா ரெடி!                                    

வெண்டைக்காய் தயிர் பச்சடி / Vendaikkai Thayir Pachadi

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வெண்டைக்காய் - 100 கிராம் 
  2. மஞ்சள் தூள்  - 1/2 தேக்கரண்டி
  3. தயிர் - 50 கிராம் 
  4. உப்பு - தேவையான அளவு                       
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. மிளகாய் வத்தல் - 1
  3. சீரகம் - 1 தேக்கரண்டி                             
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது                            
செய்முறை -
  1. வெண்டைக்காயை பொடிதாக நறுக்கி வைக்கவும். தேங்காய், சீரகம், மிளகாய் வத்தல் மூன்றையும் மிக்ஸ்சியில் அரைக்கவும்.                       
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.                                                   
  4. வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் 100 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.        
  5. தண்ணீர் வற்றி வரும் போது தயிரை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
  6. சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி ரெடி.

காலிபிளவர் பட்டர்பீன்ஸ் குருமா / Cauliflower Butterbeans Kuruma

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. காலிபிளவர் - 100 கிராம் 
  2. பட்டர் பீன்ஸ் - 100 கிராம் 
  3. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. சீரகத்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. தக்காளி - 1
  6. மட்டன் மசாலா - 1 மேஜைக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு                          
தாளிக்க -
  1. எண்ணைய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1 இன்ச் 
  3. கிராம்பு - 2
  4. பெரிய வெங்காயம் -1
  5. கறிவேப்பிலை - சிறிது
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
செய்முறை -
  1. குக்கரில் பட்டர் பீன்ஸ் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வைத்து வேக வைத்துக் கொள்ளவும். காலிபிளவரை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  3. தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  6. தக்காளி நன்கு சுருள வதங்கியதும் மிளகாய்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மட்டன் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.                 
  7. பின்னர் காலிபிளவருடன் ஒரு கை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகும் வரை கிளறவும்.
  8. காலிபிளவர் வெந்த்ததும் பட்டர்பீன்ஸ் மற்றும் 200 மில்லி தண்ணீர் சேர்த்து  மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.                       
  9. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.                     
  10. கிரேவி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான காலிபிளவர் பட்டர்பீன்ஸ் கிரேவி ரெடி.                                                                     

முருங்கைக்கீரை பொரியல் / Drumstick Leaves Stir Fry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முருங்கைக்கீரை - 3 கப் 
  2. துவரம்பருப்பு - 2 மேஜைக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு
  4. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி                               
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. மிளகாய் வத்தல் - 1
  5. பூண்டுப்பல் - 2
  6. பெரிய வெங்காயம் - 1
  7. கறிவேப்பிலை - சிறிது                              
செய்முறை -
  1. முருங்கைக்கீரையை தண்ணீரில் அலசி வைக்கவும்.
  2. துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  3. பூண்டை தோலுரித்து ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தலை போடவும். வத்தல் நிறம் மாறியதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன்  உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.                 
  5. வெங்காயம் பொன்னிறமானதும் முருங்கைக்கீரையுடன் ஒரு கை தண்ணீரும், உப்பும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
  6. தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய் துருவல், அவித்து வைத்துள்ள பருப்பு இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
  7. சுவையான முருங்கைகீரை பொரியல் ரெடி. சாதத்துடன் பரிமாறலாம்.

Saturday, March 22, 2014

முள்ளங்கி சாம்பார் / Raddish Sambar


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம் பருப்பு - 100 கிராம் 
  2. காயம் - 1/4 தேக்கரண்டி 
  3. முள்ளங்கி - 1 
  4. தக்காளி - 1
  5. சின்ன வெங்காயம் - 2
  6. பச்சை மிளகாய் - 1
  7. புளி - சிறிய கோலி அளவு 
  8. சாம்பார் பொடி - 2 மேஜைக்கரண்டி 
  9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  10. மல்லித்தழை - சிறிது 
  11. உப்பு - தேவையான அளவு                        
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது                              
செய்முறை -
  1. குக்கரில் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, காயம் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். புளியை 200 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
  2. முள்ளங்கியை தோலுரித்து வட்டமாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.                                                 
  3. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முள்ளங்கி, தக்காளி, மிளகாய், சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் வதக்கவும். 
  4. நன்கு வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  5. கொதிக்க ஆரம்பித்ததும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  6. மசாலா வாடை அடங்கியதும் அவித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து கலக்கவும். சாம்பார் நுரை கூடி வரும் போது மல்லித்தழை சேர்த்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
  7. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.            
  8. வெங்காயம் பொன்னிறமானதும் எடுத்து சாம்பாரில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான முள்ளங்கி சாம்பார் ரெடி.

கத்தரிக்காய் கொத்சு / Brinjal Gothsu


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கத்தரிக்காய் - 3
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  3. உப்பு - தேவையான அளவு                         
    அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 2 
  2. சீரகம் - 1 தேக்கரண்டி
  3. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  4. தக்காளி - 1 சிறியது                                
     தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. வெங்காயம் - 1/4
  5. கறிவேப்பிலை - சிறிது
     செய்முறை -
  1. கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும்.                                
  2. அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.             
  3. அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கத்தரிக்காய் மற்றும் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து 5 நிமிடம் வதக்கி அடுப்பை ஆப் பண்ணவும்.
  4. வதக்கிய கத்தரிக்காயை மத்து வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். 
  5. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் பொன்னிறமானதும் மசித்து வைத்துள்ள கத்தரிக்காயை போட்டு 1 நிமிடம் கிளறவும். பின்னர் அரைத்து வைத்துள்ள கலவை, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும். கொத்சு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  8. கத்திரிக்காய் கொத்சு ரெடி. இது இட்லி ,தோசை, ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...