Tuesday, June 30, 2015

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்


திருநெல்வேலியில் ஆண்டு தோறும் நடைபெறும் திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு நெல்லையப்பர் கோவிலுக்கு 511 வது தேரோட்டமாகும்.                                                                                 
                                                                                             
ஆனித் தேரோட்டம் ஜூன் 22 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆனது. காந்திமதி அம்பாளுக்கு அதிகாலை 6 மணிக்கு அபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

இதை தொடர்ந்து நந்தி முன்பு உள்ள பெரிய கொடி மரத்தில் கோவில் மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் சிவனே போற்றி, இறைவா போற்றி என்று பக்தி கோஷங்களை பாடினார்கள். தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனைகள் நடந்தது.

23 ஆம் தேதி காலை 8  மணிக்கு அம்பாள் சப்பரத்தில் எழுந்த்தருளி வீதி உலா வந்தார். 24 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் வீதி உலா வந்தார்.

25 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி காம தேனு வாகனத்தில் உலா வந்தார். 26 ஆம் தேதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதி உலா வந்தார்.

27 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வந்தார். 28 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் முத்துப்பல்லக்கில் வீதி உலா வந்தார்.

29 ஆம் தேதி காலை 7 மணிக்கு நடராஜ பெருமாள் வெள்ளை சாத்தி எழுந்த்தருளல், காலை 8 மணிக்கு  நடராஜ பெருமாள் பச்சை எழுந்த்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 10 மணிக்கு அம்பாள் தங்கக்கிளி வாகனத்தில் வீதி உலா வந்தார்.

30 ஆம் தேதியான இன்று  காந்திமதி அம்பாள் திருத்தேரில் கம்பீரமாக அமர்ந்து வர பக்த்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டை முதலான பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. எனவே குடும்பத்துடன் வந்து ஆர்வத்துடனும் பக்தியுடனும் கலந்து கொண்டு தேரோட்டத்தை கண்டு களித்தனர்.

இன்று நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வருக்கு என்று 5 தேர்கள் இழுக்கப்படும்.

ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு  திருமதி காயத்ரி கிரிசின், திரு ஞானசம்பந்தம், திருமதி ஜனனி, பாம்பே சாரதா, பால சுந்தரம், வீரமணி, சகோதரிகள் சுபலட்சுமி, சுவர்ணலதா ஆகியோரின் கச்சேரி நடந்தது.

இன்று  நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இனிதே முடிந்தது.

நன்றி
சாரதா

Thursday, June 25, 2015

தக்காளி சட்னி / Tomato Chutney

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. தக்காளி - 2
  2. பெரிய வெங்காயம் - 1
  3. மிளகாய் வத்தல் - 3
  4. பூண்டுப்பல் - 3
  5. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும். பூண்டை தோலுரித்து வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல் போட்டு வதக்கவும். பிறகு பூண்டு பல், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். மூடி போட்டு வேக விடவும். 
  4. தக்காளி நன்றாக வதங்கியதும் தேங்காயை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
  5. வதக்கியதை நன்றாக ஆற விடவும். நன்கு ஆறியதும் மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான தக்காளி சட்னி ரெடி.  இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Monday, June 22, 2015

முட்டை பொரியல் / Egg Poriyal


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை - 3
  2. தக்காளி - 1
  3. பச்சை மிளகாய் - 1
  4. மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி 
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  7. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி 
  9. மல்லித்தழை - சிறிது 
  10. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. சின்ன வெங்காயம் - 12
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதோடு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  2. வெங்காயம், மிளகாய் இரண்டையும் நீள வாக்கிலும், தக்காளியை பொடிதாகவும் நறுக்கி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.
  5. பிறகு கலக்கி வைத்துள்ள முட்டைகளை ஊற்றி வேகும் வரை நன்கு கிளறவும்.
  6. இறுதியில் மல்லித்தழை சேர்த்து நன்றக கிளறி அடுப்பை அணைத்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
  7. சுவையான முட்டை பொரியல் ரெடி.

Monday, June 15, 2015

கூழ் வத்தல் / Koozh Vathal / Rice Vathal

கூழ் வத்தல், கூழ் வடகம், வடாம் என்று வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த கூழ் வத்தலை பார்க்கும் போது எல்லோருக்கும் தன்னுடைய இளமைக்கால மலரும் நினைவுகள் மனதில் வந்து போகும். கோடை விடுமுறை வந்து விட்டால் மாவு அரைப்பதிலிருந்து கூழ் காய்ச்சுவது வரை நல்ல ஜாலியாக இருக்கும். கூழ் வத்தலை எடுத்து வைக்க வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்கள், தோழிகள் என்று எல்லோரும் வருவார்கள். இப்போது முன்பு போல பெரிய அளவில் செய்ய முடியாவிட்டாலும் தேவையான அளவு செய்து வைத்துக் கொள்ளலாம்.
இனி கூழ்வத்தலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள் -
  1. இட்லி அரிசி - 400 கிராம்
  2. உப்பு - தேவையான அளவு 
  3. எள் - 1 மேஜைக்கரண்டி 
  4. சீரகம் - 1 மேஜைக்கரண்டி 
  5. தண்ணீர் - 1 1/2 லிட்டர் 
செய்முறை -
  1. அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து அதனுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்திக்கு அரைத்துக் கொள்ளவும்.
  2. கிரைண்டரை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி அந்த தண்ணீரையும் அரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் குக்கரை வைத்து அதில் 1 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கரைத்து வைத்திருக்கும் அரிசி மாவை ஊற்றி கை விடாமல் கிளறவும். உப்பு சரி  பார்த்துக் கொள்ளவும்.
  4. மாவு கூழ் பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். கூழ் பதம் வர 15 நிமிடம் ஆகும். இறுதியில் எள், சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி ஆற விடவும்.
  5. பிறகு ஒரு வெள்ளை துணியை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்து வெயில் வரும் இடத்தில் விரித்து கூழை எடுத்து வட்ட வட்டமாக வைக்கவும். வெயில் போகும் வரை நன்கு காய விடவும்.
  6. எல்லா கூழ் மாவையும் இதே முறையில் செய்யவும். மிளகாய் வத்தலை போட்டு வைத்தல் காக்கைகள் வராது.
  7. மறு நாள் ஓரளவு காய்ந்து விடும். துணியை மாற்றி போட்டு சிறிது தண்ணீர் தெளித்து முன் புறம் வத்தலை எடுத்தால் எல்லா வத்தலும் எளிதாக வந்து விடும்.
  8. எடுத்த வத்தலை பேப்பரில் பரப்பி வெயிலில் மாலை வரை காய வைக்கவும். நன்றாக காய்ந்து விடும்.
  9. பிறகு கூழ் வத்தலை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். தேவையான போது எடுத்து எண்ணெயில் பொரித்துக் கொள்ளலாம்.

Wednesday, June 10, 2015

ஸ்ட்ராபெரி ஜாம் / Strawberry Jam


தேவையான பொருட்கள் -
  1. ஸ்ட்ராபெரி - 250 கிராம்
  2. சர்க்கரை - 250 கிராம்
  3. லெமன் ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. ஸ்ட்ராபெரியை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெட்டிய துண்டுகள் 250 கிராம் இருக்க வேண்டும்.
  2. வெட்டி வைத்துள்ள ஸ்ட்ராபெரியை நன்கு மசித்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்து அதில் மசித்து வைத்துள்ள ஸ்ட்ராபெரியை போட்டு நன்கு கொதிக்க விடவும்.
  4. பிறகு அதனுடன் சீனியும் லெமன் ஜூஸும் சேர்க்கவும். மிதமான தீயில் வைக்கவும்.
  5. எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்து ஜாம் பதத்திற்கு வரும் வரை அவ்வபோது கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  6. பதம் தெரியவில்லை என்றால் கேன்டி தெர்மாமீட்டரை (Candy thermometer) பயன்படுத்தி கொதி நிலை 220 F (105 C) வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
  7. கேன்டி தெர்மாமீட்டர் இல்லையென்றால் ஒரு ப்ளேட்டை ப்ரீசரில் வைக்கவும். சிறிது ஜாமை எடுத்து அந்த குளிர்ந்த ப்ளேட்டில் வைக்கவும்.  இவ்வாறு செய்வதனால் ஜாம் உடனே ரூம் டெம்பிரேசருக்கு வந்து விடும். அதை ஒரு விரலால் நடுவே கோடு போடவும். இரண்டு பக்கமும் ஒட்டாமல் தனி தனியாக பிரிந்தால் அது தான் சரியான பதம்.
  8. நன்கு ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து மூடி வைக்கவும். பிரிஜ்ஜில் 2 அல்லது 3 வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.
  9. சுவையான ஸ்ட்ராபெரி ஜாம் ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...