Monday, December 21, 2015

பூரி மசாலா / Poori Masala


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு - 3
  2. தக்காளி - 1
  3. பெரிய வெங்காயம் - 1/2
  4. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  5. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  6. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு 
  10. மல்லித்தழை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1/2
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் குக்கரில் உருளைக்கிழங்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  2. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து உருளைக்கிழங்குகளை சிறிது நேரம் ஆறவிட்டு தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
  3. வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடிதாகவும் நறுக்கி வைக்கவும்.
  4. தேங்காய் துருவல், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவு, தக்காளி எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். 
  7. பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, மற்றும் உப்பு சேர்த்து கிளறி அதனுடன் 100 மில்லி தண்ணீர் சேர்க்கவும். 
  8. மசாலா கெட்டியானதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான பூரி மசாலா ரெடி.

Wednesday, December 16, 2015

சோளமாவு அல்வா / Corn Flour Halwa - 300 வது பதிவு

இது  என்னுடைய 300 வது பதிவு. சோளமாவை வைத்து அல்வா எப்படி செய்வதென்று ஒரு ஸ்வீட் பதிவு !
தேவையான பொருள்கள் -
  1. சோளமாவு - 100 கிராம்
  2. சீனி - 200 கிராம்
  3. நெய் - 3 மேஜைக்கரண்டி 
  4. முந்திரிப்பருப்பு - 15
  5. கேசரி கலர் - 1/2 தேக்கரண்டி 
  6. தண்ணீர் - 200 மில்லி 
செய்முறை
  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோளமாவுடன் 50 மில்லி தண்ணீர் ஊற்றி கட்டி வராதபடி கலக்கி வைக்கவும். பிறகு கேசரி கலர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  2. கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து தனியே வைக்கவும்.
  3. அடுப்பில் அதே நான்ஸ்டிக் கடாயை வைத்து மீதமுள்ள 150 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் சீனியை போடவும். சீனி கரைந்ததும் வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும்.
  4. அதே நான்ஸ்டிக் கடாயில் சீனிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் கலக்கி வைத்துள்ள சோளமாவு கலவையை சேர்த்து 10 நிமிடம் அல்லது அல்வா பதம் வரும் வரை விடாமல் கிளறவும்.
  5. அல்வா பதம் வந்ததும் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி  நெய், முந்திரிப்பருப்பு இரண்டையும் கலந்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
  6. சுவையான சோளமாவு அல்வா ரெடி. 

Friday, December 4, 2015

இஞ்சி தொக்கு / Ginger Thokku

தேவையான பொருள்கள் -
  1. இஞ்சி - 25 கிராம் 
  2. மிளகாய் வத்தல் - 1
  3. வெல்லத்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  4. புளி - சிறிது 
  5. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
செய்முறை -
  1. இஞ்சியை நன்றாக கழுவி துடைத்து தோல் சீவி பொடிதாக வெட்டி வைக்கவும். வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி பண்ணிக் கொள்ளவும்.
  2. புளியை 50 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்,
  3. அடுப்பில் கடாயை வைத்து 2  மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி துண்டுகளை போட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்து ஆற விடவும்.
  4. அதே கடாயில் மீதமுள்ள 2  மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் மிளகாய் வத்தலையும் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும்.
  5. மிக்ஸ்சியில் வதக்கி வைத்துள்ள இஞ்சி, பொரிந்த கடுகு, வறுத்த மிளகாய் வத்தல், வெல்லத்தூள், வெந்தயப்பொடி, உப்பு இவற்றோடு புளித்தண்ணீரையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும். சுவையான இஞ்சி தொக்கு ரெடி. இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...