Tuesday, June 27, 2017

காளான் பிரியாணி / Mushroom Biryani


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாஸ்மதி அரிசி - 1 கப் 
  2. காளான் - 200 கிராம் 
  3. தக்காளி - 1
  4. தயிர் - 2 மேஜைக்கரண்டி 
  5. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  6. மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. பிரியாணி மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
  1. பட்டை - ஒரு இன்ச் அளவு 
  2. கிராம்பு - 3
  3. பச்சை மிளகாய் - 1
  4. இஞ்சி - சிறிய துண்டு 
  5. பூண்டு பற்கள் - 15
  6. மல்லித்தழை - சிறிது 
  7. புதினா - சிறிது
தேங்காய் பால் எடுக்க -
  1. தேங்காய் துருவல் - 1/2 கப் 
தாளிக்க -
  1. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  3. பட்டை - 1 இன்ச் அளவு 
  4. கிராம்பு - 2
  5. பிரிஞ்சி இலை - 1
  6. பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
  1. பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடித்து வைத்துக்கொள்ளவும். காளானை நன்கு கழுவி சுத்தப்படுத்தி கொள்ளவும்.
  2. தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து 2 கப் அளவுக்கு தேங்காய் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. காளான், வெங்காயம்,தக்காளி மூன்றையும் வெட்டி வைக்கவும்.
  4. பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பற்கள், மல்லித்தழை, புதினா எல்லாவற்றையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். 
  5. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் காளானுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், பிரியாணி மசாலா தூள், தயிர் அரைத்து வைத்துள்ள கலவை எல்லாவற்றையும் கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  6. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். 
  7. பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து நன்றாக கிளறி 2 கப் தேங்காய் பாலை ஊற்றவும். 
  9. தேங்காய் பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பை சிம்மில் வைத்து மூடவும்.
  10. 5 நிமிடம் கழித்து ஒரு தடவை லேசாக கிளறி விடவும்.  அரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான காளான் பிரியாணி ரெடி.

Monday, June 19, 2017

எள்ளுப்பொடி - 2 / Ellu Podi - 2


தேவையான பொருள்கள் -
  1. எள் - 1/2 கப் 
  2. தோல் உளுந்து அல்லது வெள்ளை முழு உளுந்து - 1/2 கப் 
  3. மிளகாய் வத்தல் - 15
  4. பூண்டு பற்கள் - 10
  5. புளி - சிறிய கோலி அளவு 
  6. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  7. கறிவேப்பிலை - சிறிது 
  8. உப்பு - தேவையான அளவு
  9. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
  2. எள், உளுந்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியே வறுத்து கொள்ளவும். புளி, பூண்டுப்பற்கள், பெருங்காயத்தூள் மூன்றையும் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
  3. இறுதியில் கறிவேப்பிலையை லேசாக வறுத்து எல்லாவற்றையும் சிறிது நேரம் ஆறவிடவும்.
  4. நன்கு ஆறியவுடன் எல்லாவற்றையும் போட்டு அதனுடன் உப்பும் சேர்த்து திரித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். சுவையான எள்ளுப்பொடி ரெடி.

Friday, June 9, 2017

சுரைக்காய் பருப்பு கூட்டு / Bottle Gourd Paruppu Kootu


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. நறுக்கிய சுரைக்காய் - 1/2 கப் 
  2. கடலைப்பருப்பு - 1/4 கப் 
  3. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  6. மல்லித்தழை - சிறிது 
  7. உப்பு - தேவையான அளவு 

அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. தக்காளி - 1
  3. சின்ன வெங்காயம் - 10
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. வெங்காயம் - சிறிது 
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. தக்காளி, சின்ன வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. தக்காளி வதங்கியதும் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்சியில் அரைக்கவும்.
  4. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பருப்பு, மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும்.
  5. பருப்பு நன்கு வெந்ததும் அதோடு சுரைக்காய் துண்டுகளை சேர்த்து வேக விடவும். சுரைக்காய் வெந்ததும் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மசாலா  வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
  6. மசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து இறக்கி விடவும்.
  7. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி கூட்டில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான சுரைக்காய் பருப்பு கூட்டு ரெடி.

Related Posts Plugin for WordPress, Blogger...