Friday, October 26, 2018

மிக்ஸர் சட்னி / Mixture Chutney


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. மிக்ஸர் - 1/2 கப் 
  2. தேங்காய் துருவல் - 1/4 கப் 
  3. மிளகாய் வத்தல் - 1
  4. உப்பு - சிறிது 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. எல்லா பொருள்களையும் மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி  அரைக்கவும்.
  2. அடுப்பில் கடாயயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். இட்லி, தோசைக்கு சுவையான மிக்ஸர் சட்னி ரெடி

Tuesday, October 16, 2018

காலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. நறுக்கிய காலிபிளவர் - 1/2 கப் 
  2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. உப்பு - தேவையான அளவு
  5. மல்லித்தழை - சிறிது
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 1/4 கப் 
  2. தக்காளி - 1
  3. சின்ன வெங்காயம் - 6
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 தேக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  4. நறுக்கிய வெங்காயம் - சிறிது
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. தேங்காய் துருவல், தக்காளி, சின்ன வெங்காயம் மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் காலிபிளவர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  3. பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கூட்டு கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கூட்டில் சேர்த்து கலக்கி விடவும்.
  5. சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு சுவையான காலிப்ளவர் கூட்டு ரெடி.

Friday, September 28, 2018

பாசிப்பயறு தோசை / Green Gran Dosa / Pesarattu Dosa


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாசிப்பயறு - 1 கப் ( 200 கிராம் )
  2. பச்சரிசி - 1/2 கப் ( 100 கிராம் )
  3. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 1/2 கப் 
  2. சின்ன வெங்காயம் - 5
  3. மிளகாய் வத்தல் - 3
  4. சீரகம் - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. பாசிப்பயறு, பச்சரிசி இரண்டையும் தனித்தனியாக 4 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிரைண்டரில் அரைத்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  2. தோசை சுடுவதற்கு முன் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், மிளகாய் வத்தல், சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து மாவில் நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து ஊற்றி விரித்து சுற்றிலும் எண்ணெய் விடவும்.வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Tuesday, August 14, 2018

பிரட் சில்லி / Bread Chilli


பிரட் சில்லி  காலை நேர டிபனாகவும், குழந்தைகளுக்கு லஞ்ச்பாக்ஸிலும் வைத்து கொடுக்கலாம். இனி  பிரெட்டை வைத்து  பிரட் சில்லி எப்படி செய்வதென்று பார்ப்போம் !

தேவையான பொருள்கள் -
  1. பிரட் துண்டுகள் - 4
  2. குடமிளகாய் - பாதி 
  3. பட்டர் - 25 கிராம் 
  4. பூண்டு பற்கள் - 2
  5. மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி 
  6. காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி 
  7. தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி 
  8. உப்பு - சிறிது 
  9. மல்லித்தழை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
  1. வெங்காயத்தை நீள வாக்கிலும், குடமிளகாயை பொடிதாகவும் நறுக்கி வைக்கவும். பூண்டுப்பற்களை ஒன்றிரெண்டாக தட்டி வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து பட்டரை ஊற்றி சூடு பண்ணிக்கொள்ளவும்.
  3. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் பிரட்டை வைத்து சுற்றிலும் பட்டர் ஊற்றி பிரட் மேலும் தேய்த்து விடவும்.
  4. பிறகு மறுபுறம் திருப்பி போட்டு சுற்றிலும் பட்டரை ஊற்றி பிரட் மேலும் தேய்த்து டோஸ்ட் பண்ணிக்கொள்ளவும். எல்லா பிரெட்டையும் இதே போல் டோஸ்ட் பண்ணி சிறிய துண்டுகளாக கட் பண்ணிக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள  வெங்காயத்தை போட்டு அதோடு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தட்டி வைத்துள்ள பூண்டுப்பற்கள், குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. பிறகு அதனுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
  7.  பிறகு அதனுடன் பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பிரெட் சில்லி ரெடி.

Thursday, July 26, 2018

முட்டை கீமா / Egg Keema



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை - 2
  2. ப்ரெஷ் பட்டாணி - 1/2 கப் 
  3. தக்காளி - 1
  4. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
  9. மல்லித்தழை - சிறிது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பிரிஞ்சி இலை - 1
  3. பட்டை - 1 இன்ச் 
  4. கிராம்பு - 2
  5. அன்னாசிப்பூ - 1
  6. பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டைகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர்  கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். 10 நிமிடங்களில் முட்டைகள் வெந்து விடும்.
  2. வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும். தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும். பட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.
  5. பச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள்  மஞ்சள் தூள்,  கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 
  6. மசாலா வாடை போனதும் அதனுடன்  துருவி வைத்திருக்கும் முட்டை துருவல்,  சேர்க்கவும். இறுதியில் மல்லித்தழை  சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். 
  7. சாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையான முட்டை கீமா ரெடி.

Tuesday, July 24, 2018

வேர்க்கடலை சட்னி இரண்டாவது முறை / Peanut Chutney



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வறுத்த வேர்க்கடலை - 3/4 கப் 
  2. பொட்டுக்கடலை - 1/4 கப் 
  3. மிளகாய் வத்தல் - 2
  4. புளி - சிறிய கோலி அளவு 
  5. பூண்டுப்பல் - 1
  6. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
  3. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. மிளகாய் வத்தல், புளி இரண்டையும் தண்ணீரில் 10 நிமிடம் வரை ஊற வைக்கவும். 
  2. ஊறிய பிறகு அதனுடன் வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை,  பூண்டுப்பற்கள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் நன்றாக கலக்கி விடவும். 
  4. இட்லி, தோசைக்கு சுவையான வேர்க்கடலை சட்னி ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...