Friday, July 29, 2016

மாம்பழ ஜாம் / Mango Jam


தேவையான பொருள்கள் -
  1. பழுத்த மாம்பழம் - 4
  2. சீனி - 200 கிராம் 
  3. லெமன் ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி 
செய்முறை -
  1. மாம்பழங்களை நன்றாக கழுவி அதன் தோலை சீவி சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அரைத்து வைத்துள்ள மாம்பழத்தை போட்டு 5 நிமிடம் வரை கிளறவும்.
  3. பிறகு அதனுடன் சீனி, லெமன் ஜூஸ்  சேர்த்து ஜாம் பதம் வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும். 
  4. ஜாம் பதம் தெரிந்து கொள்ள ஒரு சிறிய தட்டை ப்ரீஸரில் வைக்கவும். ஜாமை சிறிது எடுத்து அந்த குளிர்ந்த தட்டில் வைக்கவும். இவ்வாறு செய்வதால் ஜாம் உடனே ரூம் டெம்பரேச்சருக்கு வந்து விடும். அதை ஒரு விரலால் நடுவே கோடு போடவும். இரண்டு பக்கமும் ஒட்டாமல் தனித்தனியாக பிரிந்தால் அது தான் சரியான பதம். ஜாம் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  5. நன்கு ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். பிரிஜ்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். தோசை, இட்லி, பூரி பிரெட்டுடன் சேர்த்து  சாப்பிட நன்றாக இருக்கும்.

Tuesday, July 19, 2016

பீன்ஸ் பொரியல் / Beans Poriyal


பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பீன்ஸ் - 1/4 கிலோ 
  2. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  3. ஆம்சூர் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
  6. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி  
  3. பெரிய வெங்காயம் - 1
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. பீன்ஸ், வெங்காயம் இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி  சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், உப்பு சேர்த்து கிளறவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பீன்ஸ் வேகும் வரை கிளறி விடவும்.
  4. பீன்ஸ் நன்கு வெந்தவுடன் மிளகாய் தூள், ஆம்சூர் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கிளறவும்.

  5. இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பீன்ஸ் பொரியல் ரெடி.

Monday, July 11, 2016

சிக்கன் நக்கட்ஸ் / Chicken Nuggets

சிக்கன் நக்கட்ஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகும். குழந்தைகள் பள்ளியிலிருந்து மாலையில் வீட்டிற்கு வரும் போது செய்து ஸ்னாக்ஸாக கொடுக்கலாம். இனி சிக்கனை வைத்து நக்கட்ஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்!
பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ 
  2. முட்டை -1
  3. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  4. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  5. மைதா மாவு - 4 மேஜைக்கரண்டி
  6. பிரட் தூள் - 10 மேஜைக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
  8. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. சிக்கனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி அதன் மேல் மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. முட்டையை உடைத்து ஒரு பௌலில் கலக்கி வைக்கவும். மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். பிரட் தூளை எடுத்து வைத்துக்கொள்ளவும்
  3.  ஊறிய சிக்கன் துண்டுகளை மைதா மாவில் பிரட்டி பிறகு முட்டையில் டிப் பண்ணி  இறுதியில் பிரட் தூளில் பிரட்டி வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
  5. மீதமுள்ள எல்லா சிக்கன் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். சுவையான சிக்கன் நக்கட்ஸ் ரெடி. சிக்கன் நக்கட்ஸ்சுடன் தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறலாம்.
     

Saturday, July 2, 2016

சிறுகிழங்கு ப்ரை / Sirukilangu Fry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சிறுகிழங்கு - 1/4 கிலோ 
  2. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 
  3. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. காயத்தூள்  - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. சிறுகிழங்கை 2 மணி நேரம் ஊற வைத்து மண் போகும் வரை நன்றாக கழுவி தோல் சீவிக்கொள்ளவும்.

  2. தோல் சீவிய கிழங்குகளை பொடிதாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும். அப்போது தான் கறுத்து போகாமல் இருக்கும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை,  காயத்தூள் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பாதி வதங்கியதும் சிறுகிழங்கு துண்டுகளளுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்கவும்.
  5. கிழங்கு துண்டுகள் நல்ல பொன்னிறமானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மிளகுத்தூள், சேர்த்து எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான சிறுகிழங்கு ப்ரை ரெடி. சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...