Saturday, December 23, 2017

பிரட் பஜ்ஜி / Bread Bajji



தேவையான பொருள்கள் -
  1. பிரட் துண்டுகள் - 4
  2. கடலை மாவு - 1/2 கப் 
  3. அரிசி மாவு - 1/4 கப் 
  4. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி 
  6. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -

  1. பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி விட்டு முக்கோண  வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள்,  உப்பு போட்டு நன்றாக கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பிரட் துண்டுகளை கரைத்து வைத்திருக்கும் மாவில் முக்கி எடுத்து கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும். 
  4. ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா பிரட் துண்டுகளையும் இதே முறையில் போட்டு எடுக்கவும். சுவையான பிரட் பஜ்ஜி ரெடி. காபி, டீயுடன் பரிமாறவும்.

Wednesday, December 13, 2017

சீவல் / Seeval



தேவையான பொருள்கள் -
  1. இட்லி அரிசி  - 1 கப் 
  2. கடலை மாவு - 1 /2 கப் 
  3. மிளகாய் வத்தல் - 5
  4. வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  5. காயத் தூள் - சிறிது 
  6. உப்பு - தேவையான அளவு 
  7. சுடுவதற்கு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -
  1. இட்லி அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து அதோடு மிளகாய் வத்தல், உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் கடலை மாவு, வெண்ணெய், காயத் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முறுக்கு குழலில்  சீவல் அச்சை போட்டு பிசைந்த மாவை குழாய் கொள்ளும் அளவுக்கு நிரப்பி வட்டமாக பிழிந்து விடவும்.
  3. ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
  4. எண்ணெய் உறிஞ்சியவுடன்  ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். டீயுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Wednesday, December 6, 2017

நிலக்கடலை உருண்டை / Peanut Balls


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் நிலக்கடலை உருண்டை எப்படி செய்வதென்று பார்ப்போம் !

தேவையான பொருள்கள் -
  1. வறுத்து தோலுரித்த நிலக்கடலை - 1 கப் 
  2. பொடித்த அச்சுவெல்லம் - 1 கப் 
  3. ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி 
செய்முறை - 
  1. அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அச்சுவெல்லத்தோடு ஏலக்காய் தூளும்,  1/4 கப் தண்ணீரும் சேர்த்து  கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து உருட்டு பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
  2. காய்ச்சிய பாகு சூடாக இருக்கும் போதே நிலக்கடலையில் மேல் ஊற்றி ஒரு கரண்டி கொண்டு நன்றாக கலக்கி சிறிது நேரம் ஆற விடவும்.
  3. ஆறிய பிறகு தண்ணீரில் கையை நனைத்து கொண்டு உருண்டை பிடிக்கவும். ஒவ்வொரு உருண்டைக்கும் தண்ணீரில் நனைத்து உருண்டைகள் பிடிக்கவும். ஒரு கப் நிலக்கடலைக்கு 10 உருண்டைகள் வரை வரும்.

Friday, December 1, 2017

பூண்டு சட்னி / Garlic Chutney



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. தோலுரித்த பூண்டு பற்கள்  - 1/2 கப் 
  2. நறுக்கிய தக்காளி - 1
  3. மிளகாய் வத்தல் - 2
  4. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு லேசாக வறுத்து தனியே வைக்கவும்.
  2. அதே கடாயில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பூண்டு பற்கள், தக்காளி இரண்டையும் தனித்தனியாக  வதக்கி மிளகாய் வத்தலோடு சேர்த்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  3. நன்கு ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். 
  4. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள இரண்டு மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.
  5.  கடுகு வெடித்ததும் எடுத்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான பூண்டு சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Wednesday, November 29, 2017

கேப்பை தோசை / கேழ்வரகு தோசை / Keppai Thosai / Kezhvaraku Dosai



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கேப்பை - 3/4 கப்
  2. இட்லி அரிசி - 1/4 கப்
  3. உளுந்து - 1/4 கப்
  4. உப்பு - தேவையான அளவு
செய்முறை -
  1. கேப்பை , இட்லி  அரிசி ,  உளுந்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. ஊறிய பிறகு அதோடு உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவு இதே போல் பொங்கி இருக்கும்.
  3. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து ஊற்றி விரித்து விடவும். வெந்ததும் திருப்பி போடவும். இரு புறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான கேப்பை தோசை ரெடி.
  4. கேப்பை தோசைக்கு காரச்சட்னி நன்றாக இருக்கும்.

Sunday, November 19, 2017

காலிபிளவர் சில்லி / Cauliflower Chilli


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. காலிபிளவர் - 1/4 கிலோ 
  2. சோளமாவு - 1 மேஜைக்கரண்டி 
  3. அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி 
  4. கடலை மாவு - 1 மேஜைக்கரண்டி 
  5. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  6. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
  7. கலர் பொடி - 1/2 தேக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
  9. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை -
  1. காலிபிளவரை சிறுசிறு பூக்களாக பிரித்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு  பாத்திரத்தை வைத்து அதில்  காலிபிளவர் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிது  உப்பு சேர்த்து கொதிக்க   வைத்து  நன்றாக கழுவிக்கொள்ளவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் காலிபிளவருடன் சோளமாவு ,அரிசி மாவு , கடலை மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, கலர் பொடி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் சிறிது தண்ணீர் தெளித்து பிசிறி 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு காலிபிளவர் துண்டுகளை போடவும்.
  4. இரு புறமும் திருப்பி விட்டு காலி பிளவர் வேகும் வரை பொரித்து எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.      
  5. மீதமுள்ள எல்லா காலிபிளவர் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து எடுக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான காலி பிளவர் சில்லி  ரெடி. 

Wednesday, November 15, 2017

கேப்பை புட்டு / கேழ்வரகு புட்டு / Keppai Puttu / Kezhvaraku Puttu

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கேப்பை மாவு - 1 கப் 
  2. பொடித்த அச்சுவெல்லம் - 3/4 கப் 
  3. தேங்காய் துருவல் - 1/2 கப் 
  4. உப்பு - 1 தேக்கரண்டி 
  5. தண்ணீர் - தேவையான அளவு 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கேப்பை மாவை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து லேசாக வறுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  2. ஆறிய பிறகு அதனுடன் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் பிசைந்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவல், மற்றும் உப்பு  நன்றாக கலந்து வைக்கவும்.
  3. பிறகு இந்த கலவையை இட்லி தட்டில் அல்லது புட்டு குழலில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். 
  4. வெந்ததும் ஒரு பாத்திரத்தில் கேப்பை புட்டு மற்றும் வெல்லத்தூளை சேர்த்து  நன்றாக  கிளறவும். சுவையான கேப்பை புட்டு  ரெடி.

Saturday, November 11, 2017

பருப்பு ரசம் / Paruppu Rasam



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பருப்பு தண்ணீர் - 1/2 கப் (50 கிராம் துவரம் பருப்பை வேக வைத்து அந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்)
  2. தக்காளி - 1
  3. புளி - சிறிய கோலி அளவு 
  4. மிளகு - 1 தேக்கரண்டி 
  5. சீரகம் - 1 தேக்கரண்டி 
  6. பூண்டு பற்கள் - 5
  7. மல்லித்தழை - சிறிது 
  8. கறிவேப்பிலை - சிறிது 
  9. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி 
  2. மிளகாய் வத்தல் - 1
  3. கடுகு - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. அரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.
  2.  மிளகு , சீரகம், பூண்டுப்பற்கள் மூன்றையும் கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். தக்காளியை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல் போடவும். பிறகு கடுகு , காயம், வெந்தயம் போடவும். 
  4. கடுகு வெடித்தவுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி புளித்தண்ணீரை ஊற்றவும்.
  5. ஒரு கொதி வந்ததும் பருப்பு தண்ணீரை ஊற்றவும். நுரை கூடி வரும் போது கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  6. ஒரு பாத்திரத்தில் உப்பை போட்டு கடாயிலுள்ள ரசத்தை அதனுள் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான பருப்பு ரசம் ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...