Saturday, April 13, 2024

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !



எல்லோரும் இந்த தமிழ் புத்தாண்டில் எல்லாம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு சந்தோஷமாக கொண்டாடுவோம். அமைதி , மகிழ்ச்சி , செழிப்பு நிறைந்த ஆண்டாக அமைய அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

Wednesday, April 10, 2024

கொத்து சப்பாத்தி ( Lunch box Recipe )



தேவையான பொருள்கள் -


சப்பாத்தி - 2
முட்டை - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிது
மல்லித்தழை - சிறிது

தாளிக்க -

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை -

சப்பாத்திகளை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கிளறி கடாயில் ஒதுக்கி வைத்து கொள்ளவும். கடாயின் நடுவில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பரப்பி ஒரு நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு நன்றாக கிளறி சப்பாத்தி துண்டுகளையும் சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான கொத்து சப்பாத்தி ரெடி . குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுக்கலாம் .
Related Posts Plugin for WordPress, Blogger...