Tuesday, April 28, 2015

ஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar

இந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலாம். எனவே நீங்களும் நான் கொடுத்துள்ள குறிப்பின்படி செய்து அசத்துங்க !!

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம்பருப்பு - 25 கிராம் 
  2. பாசிப்பருப்பு - 25 கிராம் 
  3. கடலைப்பருப்பு - 25 கிராம் 
  4. தக்காளி - 1
  5. பச்சை மிளகாய் - 1
  6. சின்ன வெங்காயம் - 4
  7. ஆச்சி சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  8. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  9. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  10. மல்லித்தழை - சிறிது 
  11. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. சின்ன வெங்காயம் - 4
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு நன்கு வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  2. ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.
  3. திரித்து வைத்துள்ள பொடியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. தக்காளியை பொடிதாகவும், வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கிலும் வெட்டி வைக்கவும்.
  5. அடுப்பில் அதே கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முழு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  6. தக்காளி நன்கு வதங்கியதும் அதனுடன் ஆச்சி சாம்பார் பொடி, மஞ்சள் தூள், காயத்தூள் சேர்த்து கிளறவும். பிறகு உப்பு, 300 மில்லி தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  7. பிறகு கலக்கி வைத்துள்ள பொடியை சேர்த்து மல்லித்தழையும் சேர்த்து அடுப்பை அணைக்கவும். பொடியை சேர்த்து கொதிக்க வைக்க கூடாது. பிறகு சாம்பாரை பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
  8. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  9. வெங்காயம் பொன்னிறமானதும் எடுத்து குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான இட்லி சாம்பார் ரெடி.
குறிப்புகள் -
  1. மூன்று வகையான பருப்புகளை சம அளவு எடுத்து வறுத்து மிக்ஸ்சியில் திரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது உபயோகபடுத்தலாம்.

48 comments:

  1. அருமை..
    இந்த பருப்புப் பொடியை நானே தயார் செய்து வைத்துள்ளேன்..
    இங்கே சமையலில் அதிரடியாய்க் கை கொடுப்பது அதுவே!..

    நல்லதொரு பதிவு.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் இந்த பருப்புப்பொடி வைத்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. பொரியல் வகைகளுக்கும் பயன் படுத்தலாம். நல்ல கிரிஸ்பியாக இருக்கும்.

      Delete
  2. எனக்கு அவசியம் பயன்படக்கூடிய சமையல் குறிப்பு, இதற்கு நான் சிறப்பு நன்றி சொல்லனும், சூப்பர்,,,,,,,,, நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பயன்படக் கூடியதாக இருந்தால் எனக்கு மக்கிழ்ச்சி தான் ! கண்டிப்பாக செய்து பாருங்கள்.

      Delete
  3. ஆஹா அபுதாபிக்கு மணக்குது...

    ReplyDelete
  4. ஆஹா அபுதாபி வரை மணம் அடித்தால் சாம்பார் நன்றாக தான் இருக்கும்.

    ReplyDelete
  5. வீட்டில் செய்த சாம்பார் பொடியை சேர்க்கலாம் தானே...?

    நன்றி அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் செய்த சாம்பார் பொடியையும் சேர்க்கலாம். இட்லி சாம்பாருக்கு ஆச்சி சாம்பார் பொடி சேர்த்து செய்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.

      Delete
  6. வணக்கம்
    அம்மா
    நிச்சயம் செய்து பார்க்கிறோம்... குறிப்பை வைத்துக்கொண்டு. பகிர்வுக்கு நன்றிஅம்மா
    எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன் கண்டிப்பாக செய்து பாருங்கள். உங்கள் பக்கமும் வந்து கருத்து சொல்லி விட்டேன்.

      Delete
  7. வணக்கம் சகோதரி.

    நல்ல புதுமையான முறையில் இட்லி சாம்பாரை அறிமுகபடுத்தியிருக் கிறீர்கள் ! விளக்கமான செய்முறைகளும், படங்களும் அருமையாக உள்ளது. இந்த முறையில் இதுவரை நான் செய்ததில்லை. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    என் பதிவாக "நால்வரின் மனம் இறுதிப் பகுதி" கண்டு கருத்திட்டால் மகிழ்வடைவேன். நன்றி.!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரி கண்டிப்பாக செய்து பாருங்கள். உங்கள் பக்கத்திற்கும் வந்து கருத்து சொல்லி விட்டேன்.

      Delete
  8. சாம்பார் மணக்குது. செய்து பார்க்க வேண்டும். பருப்பு முனுக்கி சாம்பார் என்று நாங்கள் ஒரு வகை சாம்பார் செய்வோம். பாசிப்பருப்பு சேர்த்தது இல்லை. தனியாக வெங்காயம் வதக்கி கடைசியில் சேர்ப்பதும் இல்லை.
    இம்முறைப்படி செய்து உண்டு மகிழ வேண்டும் நன்றி சகோ.

    ReplyDelete
  9. வாங்க சகோ கண்டிப்பாக செய்து பாருங்கள். நல்ல சுவையும் மணமும் இருக்கும்.

    ReplyDelete
  10. இனித்தான் செய்து பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  11. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  12. மணம் கமழும் மனதை ஈர்க்கும் சமையல் குறிப்புகளுக்கு மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  13. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  14. பருப்பு பொடி சாம்பார். செய்ததில்லை.

    ReplyDelete
  15. இப்பம் உள்ள கணவன்மார்களுக்கு பயனுள்ள தகவல் . பாசிப்பருப்பு சாம்பார் எப்டி வைக்கனும் . . :)

    ReplyDelete
  16. இது எல்லோரும் செய்யக் கூடிய எளிதான சாம்பார். பாசிப்பருப்பு சாம்பார் டிபன் சாம்பார் என்ற பதிவாக கொடுத்திருக்கிறேன். படித்து கருத்திடுங்கள். முதல் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  17. நோர்வே
    மிக தெளிவான விள்க்கம். இன்றுதான் சமைத்துப்பார்த்தேன். சூப்பர்.
    லோகன்

    ReplyDelete
  18. செய்து பார்த்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  19. மிகவும் பயனுள்ள குறிப்பு!
    நீண்ட நாட்களாக தேடிய குறிப்பும் கூட.
    மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  20. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  21. அருமை அம்மா... விரைவாக வேளை முடிந்தது.. சுவையாகவும் இருந்தது.. மனைவி என் அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் கைகொடுத்தது..
    நன்றி

    ReplyDelete
  22. செய்து பார்த்து சொன்ன கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  23. எங்கள் வீட்டிலும் திடீர் சாம்பார் செய்வோம். ஆனால் பீன்ஸ், கேரட் சேர்ப்போம். பொரிகடலை மிக்சியில் அரைத்து சாம்பார் கொதி வந்த உடன் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்கிவிட்டு மல்லி இலை சேர்த்து கடுகு வெங்காயம் தாளித்து பின்னர் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கலக்கி பரிமாறலாம்.

    ReplyDelete
  24. விரிவான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  25. How to make Aachi sambar podi? Nandru

    ReplyDelete
  26. நான் ஆச்சி சாம்பார் பொடி கடையில் தான் வாங்கினேன். வீட்டு சாம்பார் பொடியும் போட்டு செய்யலாம்.

    ReplyDelete
  27. அம்மா இந்த இட்லி சாம்பார் மிகவும் அருமை மிகவும் எளிதாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  28. Dinesh toronto canadaFebruary 22, 2017 at 9:26 PM

    Madam very clear picture and good flow of explanation we feel like we make it popular to the whole canada and entire north America thank you so much

    ReplyDelete
  29. Thanks Amma...i will ask my wife to try this..

    ReplyDelete
  30. புளி சேர்ப்பது கிடையாது? சாம்பாருக்கு

    ReplyDelete
  31. இந்த இட்லி சாம்பாருக்கு புளி சேர்க்க தேவை இல்லை. தக்காளி மட்டும் போதுமானது.

    ReplyDelete
  32. ஆகா.. மிகவும் அருமையான சாம்பார்.. நானும் என் பெண்ணும் உங்கள் செய்முறைவிளக்கத்தை படித்து சப்புக்கொட்டிக்கொண்டோம்.. உறுதியாக செய்துபார்ப்பேன்.. நன்றி

    ReplyDelete
  33. கண்டிப்பாக செய்து பாருங்கள்.

    ReplyDelete
  34. அருமை,விரைவில் செய்து பார்க்கிறேன் 😊😊😊

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்து பாருங்கள்.

      Delete
  35. மிக்ஸியில் அரைத்த பொடிகள் அனைத்தையும் சாம்பாரில் கரைத்து விட வேண்டுமா

    ReplyDelete
  36. எல்லா பொடிகளையும் சேர்த்து விடவேண்டும். இரண்டு பேர் சாப்பிட சரியாக இருக்கும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...