Sunday, March 17, 2024

முழு கொத்தமல்லி பொடி / தனியா பொடி !



தேவையான பொருள்கள் -

முழு கொத்தமல்லி ( தனியா ) - 1 கப் ( 100 கிராம் )
மிளகாய் வத்தல் - 10
புளி - சிறிய கோலி அளவு
பூண்டு பற்கள் - 10
கறிவேப்பிலை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை -

பூண்டு பற்களை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கொத்தமல்லியை போட்டு நன்கு வாசம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் பரப்பி வைக்கவும். அதே கடாயில் மிளகாய் வத்தலை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து அடுப்பை அணைத்து விட்டு வறுத்த மிளகாய் வத்தலை மல்லியோடு சேர்த்து பரப்பி வைக்கவும்.
சூடாக இருக்கும் கடாயில் பூண்டு பற்கள், கறிவேப்பிலை, புளி, உப்பு எல்லவற்றையும் சேர்த்து சூடாக்கி அதையும் சிறிது நேரம் ஆற விடவும்.

நன்கு ஆறியதும் மிக்சியில் திரிக்கவும். திரித்த பொடியை நன்கு ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும். இட்லி, தோசைக்கு
அருமையானகொத்தமல்லி பொடி ரெடி!! 



 

Related Posts Plugin for WordPress, Blogger...