Friday, November 6, 2015

கொண்டைக்கடலை குருமா / Kondai Kadalai Kuruma


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் 
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி 
  5. மஞ்சள் தூள் - 1/ 2 தேக்கரண்டி 
  6. சென்னா மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  8. கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி 
  9. மேத்தி இலை - சிறிது 
  10. மல்லித்தழை - சிறிது 
  11. உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 100 கிராம் 
  2. முந்திரிப்பருப்பு - 5
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1 இன்ச் அளவு 
  3. கிராம்பு -2
  4. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி 
  5. பெரிய வெங்காயம் - 1
  6. பச்சை மிளகாய் - 2
செய்முறை -
  1. கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். 
  2. பிறகு அதிலுள்ள தண்ணீரை வடித்து விடவும். குக்கரில்  கொண்டைக்கடலை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  3. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 அல்லது 5 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து வெந்த கொண்டைக்கடலையை தனியே எடுத்து வைக்கவும்.
  4. பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடிதகாவும், பச்சை மிளகாயை இரண்டாகவும் கீறி வைக்கவும்.
  5. தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் போடவும். பெருஞ்சீரகம் பொரிந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்க்கவும்.
  7. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  8. தக்காளி வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சென்னா மசாலா தூள், கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதோடு அவித்து வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து கிளறவும். 
  9. பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொண்டைக்கடலையை வேக வைத்த தண்ணீரை கூட உபயோகபடுத்தலாம்.
  10. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். உப்பு சரி பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.
  11. குருமா கெட்டியானதும் மல்லித்தழை, மேத்தி இலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான கொண்டைக்கடலை குருமா ரெடி. பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

16 comments:

  1. அருமையான புகைப்படங்களே அழகு சகோ

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்கு அம்மா...

    ReplyDelete
  3. சன்னா மசாலா தூள் தனியா பண்ணனுமா அம்மா.?? எப்படி பண்ணனும்னு ஒரு பதிவு போடுங்கம்மா..

    ReplyDelete
    Replies
    1. சென்னா மசாலா தூள் பதிவு விரைவில் போடுகிறேன் அபி. நான் பதிவில் சக்தி சென்னா மசாலா தூள் பயன் படுத்தி செய்தேன்.

      Delete
  4. அருமை சகோதரி,
    கொண்டைக்கடலை குருமா
    இதுபோன்ற கை பக்குவம் யாருக்காவது வருமா?
    என்று சாப்பிட்டுவிட்டு சொல்லுகிறேன். நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  5. அருமையான படங்களுடன் அருமை அம்மா! வீட்டில் செய்துபார்த்துவிட்டு சொல்கிறேன்!

    ReplyDelete

  6. செய்து பார்த்து பின்னூட்டம் கொடுங்கள் பூபகீதன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. வணக்கம்

    சுவதைத்தது போல ஒரு உணர்வு அம்மா... செய்முறை விளக்கத்துடன் பகிர்வு நன்று..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. ஆகா! சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்!

    ReplyDelete
  9. எளிமையாக சொல்லித் தருவது உங்களின் சிறப்பு! தொடருங்கள்!

    ReplyDelete
  10. அருமையாக இருக்கிறது குருமா.
    முந்திரி எல்லாம் சேர்த்து ரிச்சாக இருக்கு சாரதாம்மா.
    சன்னா மசாலா தூள் செய்முறையும் நேரம் கிடக்கும் பொழுது பதிவு போடுங்க மா.

    ReplyDelete
  11. கருத்துக்கு நன்றி ஷமீ. சென்னா மசாலா பொடி பதிவு கண்டிப்பாக போடுகிறேன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...