Saturday, January 30, 2016

பட்டாணி புலாவ் / Peas Pulao


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாஸ்மதி அரிசி - 150 கிராம் 
  2. பட்டாணி - 100 கிராம் 
  3. பெரிய வெங்காயம் - 1
  4. பச்சை மிளகாய் - 3
  5. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  3. பட்டை - சிறிய துண்டு 
  4. கிராம்பு - 2
  5. ஏலக்காய் - 2
  6. பிரிஞ்சி இலை - 1
தேங்காய் பால் எடுக்க-
  1. தேங்காய் துருவல் - 1  கப் 
செய்முறை -
  1. பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
  2. தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைத்து 400 மில்லி அளவுக்கு பால் எடுத்து வைக்கவும்.
  3. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போடவும்.
  4. பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  5. பச்சை வாடை போனதும் பட்டாணி சேர்த்து கிளறவும். பிறகு அதனுடன் தேங்காய் பால், உப்பு சேர்க்கவும்.
  6. தேங்காய் பால் கொதிக்க ஆரம்பித்ததும் அதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடவும்.
  7. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  8. ஆவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி விடவும். சுவையான பட்டாணி புலாவ் ரெடி.

Friday, January 22, 2016

கறிவேப்பிலை சட்னி / Curry Leaves Chutney


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு 
  2. மிளகாய் வத்தல் - 3
  3. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  4. புளி - பாக்கு அளவு 
  5. பூண்டு பற்கள் - 4
  6. உப்பு - தேவையான அளவு 

தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுக்கவும். பிறகு அதோடு தேங்காய் துருவல், புளி, பூண்டு சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
  2. அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கறிவேப்பிலையை வறுக்கவும்.
  3. வறுத்த கறிவேப்பிலையை தேங்காய் துருவலுடன் சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.
  4. ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.
  6. இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Monday, January 11, 2016

பனீர் குடமிளகாய் கிரேவி / Paneer Capsicum Gravy


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பனீர் - 200 கிராம் 
  2. குடமிளகாய் - 1
  3. தக்காளி - 1 
  4. சிவப்பு மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  6. கரம் மசாலா - 1 தேக்கரண்டி 
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு 
  10. மல்லித்தழை - சிறிது
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
  2. சோம்பு - 1 தேக்கரண்டி 
  3. பெரிய வெங்காயம் - 1
  4. கறிவேப்பிலை - சிறிது     
அரைக்க - 
  1. தேங்காய் துருவல் - 50 கிராம் 
செய்முறை 
  1. பனீர், குடமிளகாய், வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.   
  3. அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து  பனீர் துண்டுகளை போட்டு லைட் பிரவுன்  கலர் வரும் வரை வதக்கி தனியே வைக்கவும். 
     
  4. அடுப்பில் அதே கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போடவும். சோம்பு பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 
  7. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு பனீர் துண்டுகளை சேர்த்து 3 அல்லது 5 நிமிடம் வரை கொதிக்க விட்டு மல்லித்தழை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...