Wednesday, June 18, 2014

இட்லி (தோல் உளுந்து) / Idly Using Black Urad dal

தேவையான பொருள்கள் -
  1. இட்லி அரிசி - 4 கப் 
  2. தோல் உளுந்து - 1 கப் 
  3. உப்பு - தேவையான அளவு                         
செய்முறை -
  1. அரிசியை நன்றாக கழுவி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். தோல் உளுந்தையும் கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.                                                             
  2. உளுந்து நன்றாக ஊறியதும் இரண்டு அல்லது மூன்று தடவை தண்ணீர் மாற்றி தோல் எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும்.                              
  3. முதலில் பருப்பிலுள்ள தண்ணீரை வடித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். பிறகு கிரைண்டரில்  பருப்பை போட்டு அரைக்கவும். 5 நிமிடத்திற்கு ஒரு தடவை இரண்டு கை அளவு தண்ணீர் தெளித்து மொத்தம் 20 நிமிடம் அரைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்தால் தான் மாவு நன்றாக பொங்கி வரும்.
  4. மாவு பொங்கிய பதம் வந்தவுடன் மாவை எடுத்து ஒரு பெரிய குத்துச்சட்டியில் வைக்கவும்.
  5. அடுத்தது அரிசியில் உள்ள தண்ணீரையும் வடித்து வைத்துக் கொள்ளவும். அரிசியை  கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.10 நிமிடம் கழித்து தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்து அரைக்கவும். 15 நிமிடங்களில் அரிசி அரைபட்டு விடும்.                                                             
  6. அரிசி நன்கு அரைபட்டதும் எடுத்து உளுந்து மாவோடு சேர்த்து வைக்கவும். பிறகு 150 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி கிரைண்டரை கழுவி அந்த தண்ணீரையும், உப்பும் மாவோடு சேர்த்து பிசையவும். 12 மணி நேரம் புளிக்க விடவும். அடுத்த நாள் காலையில் இதே போல் பொங்கி இருக்கும்.                                                                                                                       

  7. அடுப்பில் இட்லி கொப்பரையை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பொங்கிய மாவை ஒரு கரண்டியால் நன்றாக கலக்கி வைக்கவும்.
  8. இட்லித்தட்டில் துணியை போட்டு ஒரு குழிக்கரண்டி வீதம் மாவை எடுத்து ஊற்றி இட்லி கொப்பரையில் வைத்து மூடி வைக்கவும். இட்லி 10 நிமிடத்தில் வெந்துவிடும்.
  9. நன்கு வெந்தவுடன் எடுத்து துணியை சுற்றி தண்ணீர் தெளித்து இட்லிகளை எடுத்து ஹாட்பாக்ஸ்சில் வைக்கவும். மிருதுவான பூப்போன்ற இட்லி ரெடி.
முழு உளுந்தில் இட்லி செய்யும் முறைக்கு இங்கே கிளிக் பண்ணவும்.

குறிப்புக்கள்  -
  1. இந்த மாவில் தோசை, பணியாரம், ஊத்தாப்பம் செய்யலாம்.
  2. தோசை சுடுவதற்கு மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி தோசைகளாக சுடவும்.
  3. பணியாரம், ஊத்தப்பம் இரண்டுக்கும் மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.

ஹோட்டல் எம்டி சால்னா / Hotel Empty Salna

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பெரிய வெங்காயம் - 1
  2. தக்காளி - 1
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. சிக்கன் மசாலா - 1/2 தேக்கரண்டி 
  5. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு
  7. மல்லித்தழை - சிறிது                                
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. கொத்தமல்லி - 2 மேஜைக்கரண்டி 
  3. பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி 
  4. மிளகு - 1/2 தேக்கரண்டி 
  5. பட்டை - 1/2 இன்ச் அளவு 
  6. கிராம்பு - 1                                              
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. பொட்டுக்கடலை - 1 மேஜைக்கரண்டி 
  3. முந்திரிப்பருப்பு - 4
  4. கசகசா - 1/2 தேக்கரண்டி                       
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1/4 இன்ச் அளவு 
  3. கிராம்பு - 1
  4. வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். தாளிப்பதற்கு தேவையான கால் பங்கு வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு  எல்லாவற்றையும் போட்டு ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும். ஆறிய  பின் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். 

  3. அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து சுருண்டு வரும் வரை வதக்கி சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பின் மிக்ஸ்சியில் கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.                                                             

  4. தேங்காய் துருவல், பொட்டுக் கடலை, முந்திரிப்பருப்பு, கசகசா எல்லாவற்றையும்  மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.                           
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
  6. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  7. பிறகு திரித்து வைத்துள்ள மசாலா பொடி, உப்பு, சிக்கன் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து அதோடு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.                        
  8. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். 
  9. பிறகு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
  10. மல்லித் தழையை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான எம்டி சால்னா ரெடி. எம்டி சால்னா பரோட்டா, பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்புக்கள்  -
  1. தேங்காய் கலவையில் பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது.
  2. வறுத்து பொடி செய்வதற்கு பதிலாக மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், பட்டை, கிராம்புத்தூள் சேர்த்தும் செய்யலாம்.

வாழைக்காய் பஜ்ஜி / Raw Banana Bajji

 தேவையான பொருள்கள் -
  1. வாழைக்காய் -1
  2. கடலைமாவு - 100 கிராம் கப்
  3. அரிசிமாவு - 25 கிராம்
  4. மிளகாய்த்தூள் - 1 மேஜைக்கரண்டி  
  5. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  6. சோடா உப்பு - 1 தேக்கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. சுடுவதற்கு எண்ணைய் - தேவையான அளவு
செய்முறை -
  1. முதலில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், காயத்தூள், சோடா உப்பு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கெட்டியாக கரைத்து வைக்கவும்.
  2. வாழைக்காயை தோல் சீவி சிப்ஸ் சீவும் பலகையில் வைத்து நீள சைஸில் சீவி வைக்கவும்.

  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து கரைத்து வைத்துள்ள மாவில் சீவி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை முக்கி கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
  4. இரு புறமும் நன்கு வெந்ததும் எடுத்து ஒரு வடிதட்டில் அல்லது பேப்பரில் வைக்கவும்.
  5. எண்ணைய் நன்கு உறிஞ்சியவுடன் எடுத்து பரிமாறவும். தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும். சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி. வாழைக்காயை சிறிதாக சீவியும் பஜ்ஜி செய்யலாம்.                                                                   

முட்டை மசாலா / Egg Masala

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை - 2
  2. தக்காளி - 1
  3. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி 
  4. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
  5. தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 
  7. மல்லித்தழை - சிறிது                               
தாளிக்க -
  1. எண்ணைய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பெரிய வெங்காயம் - 1
  3. கறிவேப்பிலை - சிறிது                                
செய்முறை -
  1. முதலில் முட்டைகளை வேக வைத்து எக் கட்டர் அல்லது கத்தியால் துண்டுகளாக வெட்டி வைக்கவும்.                                                 
  2. பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். 
  4. தக்காளி நன்கு சுருள வதங்கியதும் உப்பு, கரம் மசாலா தூள், மிளகுத்தூள், தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்.                                      
  5. பிறகு வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து மசாலா எல்லா இடத்திலும் படும் படி நன்றாக கிளறி உப்பு சரி பார்த்து மல்லித்தழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டை மசாலா ரெடி.                              

உருளைக்கிழங்கு ப்ரை / Potato Finger Fry

                                     
பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு - 5
  2. மிளகாய்த்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  3. கார்ன்பிளோர் - 1 மேஜைக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
  5. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு                     
செய்முறை -
  1. முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமாக வெட்டி வைக்கவும். பிறகு அதன் மேல் மிளகாய்த்தூள், கார்ன்பிளோர், உப்பு சேர்த்து கிளறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து கடாய் கொள்ளும் அளவுக்கு சீவி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை எடுத்து போடவும்.                                                                                                           

  3. இரு புறமும் நல்ல பொன்னிறமானதும் எடுத்து ஒரு வடி தட்டில் வைக்கவும்.
  4. மீதமுள்ள எல்லா துண்டுகளையும் இதே முறையில் பொரித்து எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு ப்ரை ரெடி. தக்காளி சாஸூடன் பரிமாறவும். அல்லது சாதத்துக்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம்.

Wednesday, June 11, 2014

குழம்பு பொடி / Kuzhambhu Podi

தேவையான பொருள்கள் -
  1. மிளகாய் வத்தல் -20
  2. கொத்தமல்லி - 50 கிராம் 
  3. மிளகு - 3 மேஜைக்கரண்டி 
  4. சீரகம் - 3 மேஜைக்கரண்டி 
  5. கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு         
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மிதமான சூட்டில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு மூன்றையும் போட்டு வறுக்கவும். நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து விட்டு சீரகம், கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆற விடவும்.                                                                                                                           

  2. நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் போட்டு திரிக்கவும். திரித்த பொடியை ஒரு பேப்பரில் பரப்பி ஆறவிடவும்.                                                            
  3. ஆறியபின் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். குழம்பு பொடி ரெடி.
குறிப்பு -
  1. இந்த குழம்பு பொடியை மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, முட்டை குழம்பு, கூட்டு வகைகள் அனைத்திலும் உபயோகபடுத்தலாம்.

Monday, June 9, 2014

சேமியா கேசரி / Semiya Kesari / Vermicelli Kesari

தேவையான பொருள்கள்
  1. சேமியா - 1 கப் 
  2. சீனி - 3/4 கப் 
  3. முந்திரிப்பருப்பு - 10
  4. நெய் - 5 மேஜைக்கரண்டி 
  5. ஏலக்காய் பவுடர் - 1/4 தேக்கரண்டி 
  6. கேசரி கலர் - சிறிது 
  7. தண்ணீர் - 1 1/4 கப்                                  
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து 3 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து முந்திரிப்பருப்பை போட்டு வறுக்கவும். முந்திரிப்பருப்பு பொன்னிறமானதும் அதனுடன் சேமியாவை சேர்த்து வறுக்கவும்.                                                                            

  2. பிறகு அதனுடன் 1 1/4 கப் தண்ணீர், கேசரி கலர் சேர்த்து சேமியா வேகும் வரை நன்கு கிளறவும்.                                                                     
  3. சேமியா வெந்தவுடன் சீனியை சேர்த்து கேசரி கெட்டியாகும் வரை கை விடாமல் நன்கு கிளறவும்.                                                                      
  4. இறுதியில் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய்யும், ஏலக்காய்பவுடரும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.                                        
  5. சூடு ஆறியவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுவையான சேமியா கேசரி ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...