தேவையான பொருட்கள் -
- முழு உளுந்து - 1 கப்
- இட்லி அரிசி - 5 கப்
- வெந்தயம் - 1 தேக்கரண்டி
- சாதம் - 1 கைப்பிடி (இருந்தால்)
- உப்பு - தேவையான அளவு
- உளுந்தை நன்றாக கழுவி வெந்தயம் சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் வெளியிலும் ஒரு மணி நேரம் பிரிட்ஜிலும் ஊற வைக்கவும்.
- இட்லி அரிசியை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறியதும் உளுந்தில் உள்ள தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். சாதத்தை முதலில் கிரைண்டரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். ஒரு நிமிடம் கழித்து உளுந்தை போட்டு அரைக்கவும்.
- பிறகு 5 நிமிடம் கழித்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து உளுந்தை மொத்தமாக 30 - 45 நிமிடம் நன்றாக அரைத்துக் கொள்ளவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்தால் தான் நன்றாக பொங்கி வரும். ஊற வைத்திருந்த தண்ணீரேயே அரைக்கும் போது உபயோகபடுத்தவும்.
- பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு அரிசியை போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து மிகவும் நைசாக இல்லாமல் சிறிது கொர கொரவென்று அரைத்துக் கொள்ளவும்.
- அரிசி மாவையும் அதே பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கையை வைத்து பிசையவும்.
- பிறகு 12 மணி நேரம் புளிக்க விடவும். வெளிநாட்டில் இருப்பவர் ஓவன் உள்ளே வைத்து அதன் லைட்டை ஆன் செய்து குறைந்தது 15 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- புளித்த மாவை நன்றாக கலக்கவும். ஒரு குழி கரண்டியால் மாவை எடுத்து இட்லி தட்டில் ஊற்றவும்.
- இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு இட்லி தட்டை உள்ளே வைத்து 15 நிமிடம் வேக வைத்து இறக்கவும். மிருதுவான இட்லி ரெடி. இதே மாவை தோசைக்கும் உபயோகபடுத்தலாம்.
- உளுந்து நல்ல தரமானதாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் 5 கப் அரிசிக்கு பதிலாக 4 கப் சேர்க்கவும்.
- உளுந்து நன்றாக பொங்க பொங்க அரைக்க வேண்டும். அதே போல் கடைசியாக மாவு நன்றாக புளித்து பொங்க வேண்டும். அப்போது தான் இட்லி மிருதுவாக வரும்.
- நன்றாக அரைத்தும் இட்லி கடினமாக வந்தால் உளுந்தின் அளவை கூட்டவும். அல்லது அரிசியின் அளவை குறைத்து போட்டு செய்து பாருங்கள்.
- இட்லி மிருதுவாக வந்தாலும் சில நேரங்களில் உப்பாமல் இருக்கும். அவ்வாறு வந்தால் உளுந்தின் அளவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளவும்.
- ஒவ்வொறு இடத்திலும் உளுந்து மாவும், இட்லி அரிசியும் வேறு மாதிரியாக இருக்கும். அதனால் 1 கப் உளுந்துக்கு எவ்வுளவு கப் இட்லி அரிசி போட வேண்டும் என்பதை சில தடவைகள் அளவு மாற்றி மாற்றி செய்து பார்த்தால் தான் தெரியும்.
- மாவில் முதல் இரண்டு நாள் இட்லி சுட்டு விட்டு பிறகு தோசை சுடுவதற்கு உபயோகபடுத்தவும். தோசை சுடுவதற்கு முன்னர் மாவை கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். அப்போது தான் தோசை மொரு மொருவென்று வரும்.
idli looks soft. idli with sambar chutney is very tempting.
ReplyDeleteThank you Gayathri.
Deleteஇட்லி ரெசிப்பி மட்டும் (ஒவ்வொருத்தருடையது) அதிகமிருக்கும்.எப்படி செய்தும் சரியாய் வருவது மிக குறைவு. சூட்டுடன் சாப்ட் ஆ இருக்கும் ஆறினால் இறுகிவிடும்.
ReplyDeleteஇம்முறை உங்க குறிப்பின் படி செய்து மிகவும் நன்றாக வந்திருக்கு. இறுக்கமாக இல்லை அப்படியே சாப்ட் ஆ இருக்கு. நான் எதிர்பார்க்க வேயில்லை. படம் எடுத்தேன். ரெம்ப நன்றிகள் உங்களுக்கு. படங்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆக குறிப்புடன் அருமை.
இட்லி செய்து பார்த்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்ன மாதிரி இட்லி மிருதுவாக வருவது கடினம் தான். என்னுடைய குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி.
ReplyDelete