தேவையான பொருள்கள்
- சேமியா - 1 கப்
- சீனி - 3/4 கப்
- முந்திரிப்பருப்பு - 10
- நெய் - 5 மேஜைக்கரண்டி
- ஏலக்காய் பவுடர் - 1/4 தேக்கரண்டி
- கேசரி கலர் - சிறிது
- தண்ணீர் - 1 1/4 கப்
- அடுப்பில் கடாயை வைத்து 3 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து முந்திரிப்பருப்பை போட்டு வறுக்கவும். முந்திரிப்பருப்பு பொன்னிறமானதும் அதனுடன் சேமியாவை சேர்த்து வறுக்கவும்.
- பிறகு அதனுடன் 1 1/4 கப் தண்ணீர், கேசரி கலர் சேர்த்து சேமியா வேகும் வரை நன்கு கிளறவும்.
- சேமியா வெந்தவுடன் சீனியை சேர்த்து கேசரி கெட்டியாகும் வரை கை விடாமல் நன்கு கிளறவும்.
- இறுதியில் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய்யும், ஏலக்காய்பவுடரும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
- சூடு ஆறியவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுவையான சேமியா கேசரி ரெடி.
Semiya kesari looks delicious. All time favourite. Tempting.
ReplyDelete