பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- உருளைக்கிழங்கு - 5
- மிளகாய்த்தூள் - 1 மேஜைக்கரண்டி
- கார்ன்பிளோர் - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
- முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமாக வெட்டி வைக்கவும். பிறகு அதன் மேல் மிளகாய்த்தூள், கார்ன்பிளோர், உப்பு சேர்த்து கிளறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து கடாய் கொள்ளும் அளவுக்கு சீவி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை எடுத்து போடவும்.
- இரு புறமும் நல்ல பொன்னிறமானதும் எடுத்து ஒரு வடி தட்டில் வைக்கவும்.
- மீதமுள்ள எல்லா துண்டுகளையும் இதே முறையில் பொரித்து எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு ப்ரை ரெடி. தக்காளி சாஸூடன் பரிமாறவும். அல்லது சாதத்துக்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment