தேவையான பொருள்கள் -
- வாழைக்காய் -1
- கடலைமாவு - 100 கிராம் கப்
- அரிசிமாவு - 25 கிராம்
- மிளகாய்த்தூள் - 1 மேஜைக்கரண்டி
- காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- சோடா உப்பு - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- சுடுவதற்கு எண்ணைய் - தேவையான அளவு
- முதலில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், காயத்தூள், சோடா உப்பு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கெட்டியாக கரைத்து வைக்கவும்.
- வாழைக்காயை தோல் சீவி சிப்ஸ் சீவும் பலகையில் வைத்து நீள சைஸில் சீவி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து கரைத்து வைத்துள்ள மாவில் சீவி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை முக்கி கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
- இரு புறமும் நன்கு வெந்ததும் எடுத்து ஒரு வடிதட்டில் அல்லது பேப்பரில் வைக்கவும்.
- எண்ணைய் நன்கு உறிஞ்சியவுடன் எடுத்து பரிமாறவும். தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும். சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி. வாழைக்காயை சிறிதாக சீவியும் பஜ்ஜி செய்யலாம்.
No comments:
Post a Comment