செய்முறை -
- முதலில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கவும். அதனுடன் பால் மற்றும் சீனி சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் தோசைக்கல்லை காய வைத்து சூடானதும் பிரட் ஒன்றை எடுத்து முட்டை கலவையில் முக்கி எடுத்து தோசைக்கல்லில் போட்டு பிரட்டை சுற்றி ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றவும். ஓரங்களில் மொறுகலானதும் மறு புறம் திருப்பி போடவும்.
- இருபுறமும் மொறுகலானதும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
- மீதமுள்ள 5 பிரட் துண்டுகளையும் இதே முறையில் ரோஸ்ட் செய்யவும். சுவையான பிரெஞ்ச் டோஸ்ட் ரெடி.
Yummy recipe.
ReplyDeleteSuper
ReplyDelete